கர்நாடகா அடுத்த முதல்வர் யார்? நெருங்கிய சித்தராமையா.. டிகே சிவக்குமாருக்கு பெரிய பிரச்சனை! போச்சே
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸில் முதல்வர் பதவியை பெறுவதில் டிகே சிவக்குமாருக்கு பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது. இதனால் சித்தராமையா மீண்டும் முதல்வராக அதிக வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போவதற்கான முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்தார். 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியையும் பெற்றது. கர்நாடகாவில் 113 இடங்களில் வென்றால் ஒரு கட்சியால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும்.
இத்தகைய சூழலில் தான் நேற்று காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 தொகுதிகளில் வென்றனர். இதன்மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் முதல்வர் பதவிக்கு 2 பேர் டாப் லிஸ்ட்டில் உள்ளனர். முதலிடத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவின் பெயர் உள்ளது. 2 வது இடத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டிகே சிவக்குமாரின் பெயர் இருக்கிறது. இதில் சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியிலும், டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். சித்தராமையா 46 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் டிகே சிவக்குமார் 1.21 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
இவர்கள் 2 பேர் இடையே தான் முதல்வர் பதவிக்கான போட்டி உள்ளது. இந்நிலையில் தான் யாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூரில் நடக்கும் நிலையில் அதுபற்றி விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்க அதிக வாய்ப்புள்ளது. மாறாக முதல்வர் பதவியை எட்டிப்பிடிப்பதில் டிகே சிவக்குமாருக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சிக்காக நன்றாக உழைத்துள்ளார். மேலும் அவர் சார்ந்த ஒக்கலிகர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் ஓல்டு மைசூர் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை 37 இடங்களில் வெற்றி பெற வைத்துள்ளார். அதோடு மட்டுமின்றி ஜேடிஎஸ் கட்சியின் கோட்டை என்ற பெயரை ஓல்டு மைசூர் மாவட்டங்களில் அவர் உடைத்தெறிந்துள்ளதோடு, பாஜக அங்கு காலூன்ற வகுத்த வியூகங்களை தவிடுபொடுயாக்கி உள்ளார்.
மேலும் பல சந்தர்ப்பங்களில் பிற மாநில எம்எல்ஏக்களை பாஜகவிடம் இருந்து காப்பாற்றும் வகையில் கர்நாடகாவில் பாதுகாப்பாக வைத்து கட்சி மேலிடத்தின் குட்புக்கில் உள்ளார். இவை அனைத்தும் டிகே சிவக்குமாருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ள நிலையில் தான் அவர் மிகப்பெரிய சிக்கலை சந்தித்துள்ளார். அதாவது டிகே சிவக்குமார் மீது சிபிஐ, அமலாக்கத்துறை உள்பட பல விசாரணை அமைப்புகளில் வழக்கு நிலுவையில் உள்ளது.
குறிப்பாக ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையின் விசாரணை அவருக்கு எதிராக நடந்து வருகிறது. மேலும் அவ்வப்போது விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐயும் சம்மன் அனுப்பி வருகிறது. இது அவருக்கு மைனஸாக உள்ளது. ஒருவேளை முதல்வர் பதவி அவருக்கு வழங்கும் பட்சத்தில் அவர் உடனடியாக கைது கூட செய்யப்படலாம் என காங்கிரஸ் மேலிடம் அஞ்சுகிறது. இது டிகே சிவக்குமாரின் எதிர்கால அரசியல் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் தான் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவிக்கு பதில் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மாறாக கர்நாடகா முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சி சித்தராமையாவுக்கு வழங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இவர் 2013 முதல் 2018 ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். இந்த சமயத்தில் இலவச ரேஷன் அரிசி திட்டம், ஷீரா பாக்யா எனும் பால் வழங்கும் திட்டம் உள்பட ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. அதோடு ஊழல், முறைகேடு புகாரில் அவர் சிக்கவே இல்லை.
மேலும் எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தினரிடம் செல்வாக்கு பெற்ற தலைவராக இருக்கிறார். அதோடு கட்சியில் உள்ள தலைவர்கள் அனைவரையும் தன்வசப்படுத்தும் திறமை கொண்டவர். அதாவது யாராவது அதிருப்தி அடைந்தால் அவர்களை சாதுரியமாக பேசி சமாதானப்படுத்தும் திறன் கொண்டவர். இதனால் தான் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்க அதிக வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications