ஆன்லைன் கிளாஸில் திடீரென வந்த அப்பாவின் வீடியோ.. வசமாக சிக்கிய கணவர்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: வீட்டில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்தவர், மகளுக்கு ஆன்லைன் கிளாஸ்க்கு செல்போனை கொடுத்ததால் அவரது கள்ளக்காதல் விவகாரம் அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நடந்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் எந்த அளவிற்கு மாணவர்களின் கல்வித்திறனை வளர்க்கிறது என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். பள்ளியில் சென்று குழந்தைகள் பாடம் கற்றகாலத்தை மறந்தே விட்டார்கள். ஆன்லைன் வகுப்புகள் அவர்களது கல்வி திறனை பாதித்துள்ளதுடன், மன உளைச்சலையும் அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

இது ஒரு புறம் எனில், பல வீடுகளில் ஒருவரிடமே ஸ்மார்ட்போன் இருக்கிறது. அவர்களது பெற்றோர் செல்போனை வேலைக்கு எடுத்து சென்றுவிடுவதால் கல்வி கற்க முடியாத சூழலில் பல மாணவர்கள் தவிக்கிறார்கள். இன்னொரு புறம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியும் எட்டாத உயரத்தில் இருக்கிறது. எல்லாம் இந்த பாழாய் போன கொரோனாவால் வந்த வினை.

அந்தரங்கங்கள்

அந்தரங்கங்கள்

சரி சொல்ல வந்ததை சொல்லிவிடும். ஆன்லைன் வகுப்புகளால் பெற்றோர்களின் அந்தரங்கங்களும் அம்பலம் ஆகிவருகிறது. மனைவிக்கு தெரியாமல் கணவரும், கணவருக்கும் தெரியாமல் மனைவியும் செய்து வந்த செயல்கள் ஆன்லைன் வகுப்புகளால் வெளிச்சத்திற்கு வந்து வீடுகளில் சண்டையாகி வருகின்றன. அப்படித்தான் கர்நாடகா மாநிலத்தில் நடந்துள்ளது.

மகளின் ஆன்லைன் வகுப்பு

மகளின் ஆன்லைன் வகுப்பு

கர்நாடகா மாநிலம் மாண்டியாவின் நாகமங்களா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கல்யாணம் 18 வருடம் ஆகின்றன. கடந்த அக்டோபர் மாதம், 12வது படிக்கும் தனது மகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போனை ராஜேஷ் கொடுத்துள்ளார்.

கள்ளக்காதல் அம்பலம்

கள்ளக்காதல் அம்பலம்

வகுப்பு முடிந்ததும், போனில் இருந்த வீடியோக்களை பார்த்த அவரது மகள் அதிர்ச்சி அடைந்தார். அதில், தனது தந்தை வேறொரு பெண்ணுடன் இருக்கும் வீடியோக்கள் பல இருந்திருக்கிறது.. அதன் மூலம், ராஜேஷ் நீண்ட காலமாக குடும்பத்திடமிருந்து மறைத்து வைத்திருந்த கள்ளக்காதல் ரகசியம் வீட்டில்அம்பலம் ஆனது.

மனைவி கோபம்

மனைவி கோபம்

இதனால் குடும்பத்தில் பெரிய சண்டை வெடித்தது. மகள்களை அழைத்துக் கொண்டு பிரிந்து செல்வதாக மனைவி பிடிவாதமாக இருந்திருக்கிறார். கணவனின் செயலை கண்டித்து போலீஸ் நிலையத்திற்கு வந்து மனைவி சொன்ன பிறகே பிரச்சனை வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இது போல் எத்தனை சம்பங்கள் வெளி உலகிற்கு வராமல் உள்ளன என்பது மர்மம் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+