பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பார் & ரெஸ்டாரண்ட், கிளப், லாட்ஜ்களிலும் மது விற்பனைக்கு அனுமதி.. 10 நாளுக்கு மட்டும்: கர்நாடக அரசு

Google Oneindia Tamil News

பெங்களூர்: அடுத்த 10 நாட்களுக்கு, பார் மற்றும் உணவகங்களில் மதுபானம் விற்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிளப்புகளும் எம்ஆர்பி விலையில் தங்களின் தற்போதைய மதுபான இருப்பை விற்று தீர்க்கலாம்.

Recommended Video

    எந்த பகுதியில் எவ்வளவு மது விற்பனை? முழு தகவல்

    கலால் துறை ஆணையர் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் இதை தெரிவித்துள்ளார். தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபானம் விற்பனை செய்யப்படலாம். மே 8 முதல் மே 17 வரைதான் அனுமதி. தங்கள் மதுபான இருப்பு தீர்ந்துபோகும் வரைதான் விற்க அனுமதிக்கப்படும். இருப்பினும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் மது விற்க அனுமதியில்லை.

    Karnataka government given permission to sell liquor in bars and restaurants

    சீல் செய்யப்பட்ட பாட்டில்களை மட்டுமே விற்க முடியும். வாங்கிக் கொண்டு அங்கேயே குடிக்க உரிமை கிடையாது.

    மூவாயிரத்தை கடந்தது சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.. தமிழக மொத்த பாதிப்பில் 50% இங்குதான்மூவாயிரத்தை கடந்தது சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.. தமிழக மொத்த பாதிப்பில் 50% இங்குதான்

    கர்நாடகாவில் 3,600 பார்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்கள், 250 கிளப்புகள் மற்றும் 1,400 போர்டிங் மற்றும் லாட்ஜ்கள் உள்ளன. இவற்றுக்கு இந்த அனுமதி பொருந்தும். ஏற்கனவே மதுபான கடைகளை திறக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், இப்போது பார் மற்றும் ரெஸ்டாரண்ட்டில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    English summary
    Karnataka government has given permission to sell liquor for the next 10 days in bars and restaurants. Clubs can also sell their existing liquor reserves at MRP prices.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X