டிகே சிவக்குமாருக்கு சிக்கல்? சிபிஐ பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு
பெங்களூர்: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தனக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான டிகே சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் கணக்கில் வராத ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

அதன்பேரில் டி.கே.சிவகுமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார்மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
இந்த நிலையில், தனக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டிகே சிவக்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் டிகே சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை நிறைவு செய்யவும் சிபிஐக்கு நீதிமன்றம்விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார்












Click it and Unblock the Notifications