பயிரை மேய்ந்த வேலி கர்நாடகத்தில்.. கொத்தனார் கணவனுக்கு வந்த விபரீத ஆசை.. கேட்டதுமே ஆடிப்போன மனைவி
பெங்களூர்: எவ்வளவுதான் பெண்கள் பாதுகாப்புக்காக சட்டங்களை இயற்றினாலும், பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. பெண்ணுக்கு வேலியாக இருக்க வேண்டியே கணவனே கொடுமைப்படுத்தினால்? பாதுகாப்பும், நியாயமும் பெற்றுத்தர வேண்டிய காவல்துறையிலேயே சில கொடூரர்கள் இருந்தால்? அப்படியொரு பயங்கரமான சம்பவம்தான் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ளது கங்கனாடி டவுன்... இங்கு வசித்து வரும் பெண்ணுக்கு 35 வயதாகிறது... இவரது கணவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார்.

கொத்தனார் கணவர்
இந்த கொத்தனார் தன்னுடைய மனைவியை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார்.. இதற்காக மனைவிக்கு, பணத்தாசையை தூண்டிவிட்டுள்ளார்.. பிறகு, மனைவியை வலுக்கட்டாயமாக பிறரிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த ஆரம்பித்துள்ளார்..
இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் கணவரின் நிர்ப்பந்தம் காரணமாக வேறு வழியின்றி அவர் சொல்கிறபடியே நடக்கும் நிலைமை வந்தது.. கணவர் சொன்ன, வேறொரு நபரிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.. இதனை கணவரே மறைந்திருந்து வீடியோவும் எடுத்துள்ளார். ஆனால், இப்படி வீடியோ எடுத்தது, சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமல்ல, மனைவிக்கே தெரியாது..
வீடியோ மிரட்டல்
பிறகு திடீரென அந்த வீடியோவை காண்பித்து மனைவியை மிரட்டி துவங்கினார்.. கெட்ட வார்த்தைகளில் திட்டி அடித்து உதைத்தார்.. நாளுக்கு நாள் அடி, உதை தாங்க முடியாமல் நிலைகுலைந்த பெண், இதை பற்றி யாரிடம் சொல்வது என தெரியாமல் தவித்தார்.. அப்போதுதான், தனக்கு தெரிந்த போலீஸ்காரரான சந்திரநாயக், காவூர் போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்ப்பவதால், அவரிடம் சென்று கண்ணீர் விட்டு சொல்லி அழுதார்..
உடனே அந்த போலீஸ்காரர், நேரடியாக பெண்ணின் வீட்டிற்கு வந்து கணவரிடம் விசாரித்து, அவரது செல்போனை பிடுங்கி, அதில் பதிவாகியிருந்த ஆபாச வீடியோக்களை அழித்தார். ஆனால் சந்திரநாயக், அந்த பெண்ணின் கணவர் அனுமதியுடனே, பெண்ணுடன் உல்லாசமாக இருக்க துவங்கினார்.. அத்துடன், தனக்கு தெரிந்த சிலருடன் உடலுறவில் இருக்க வேண்டும் என்றும் சந்திரநாயக் பெண்ணை கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதனால் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புக்குள்ளான பெண், இதுகுறித்து கங்கனாடி போலீசில் புகார் அளித்தார்... இந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்..
பிடிபட்ட 2 பேர்
அப்போது கொத்தனார் வேலை செய்யும் கணவர், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், தன்னுடைய பணத்தேவைக்காக மனைவியை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்ததும், இதற்காக மனைவியை ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
இந்த விஷயத்துக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பி சென்ற போலீஸ்காரர் சந்திரநாயக்கும், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அதே பெண்ணை வைத்து, ஏராளமான பணம் சம்பாதித்து வந்ததும் உறுதியானது.. இப்போது, கங்கனாடி போலீசார் சந்திரநாயக்,, கொத்தனார் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications