எண்ண எண்ண குறையல.! ஒரே மாதத்தில் ரூ.3,48,69,621 பணம், தங்கம், வெள்ளி என கோயிலில் கொட்டிய காணிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ராகவேந்திர சுவாமி மடம் இருக்கிறது. இங்கு வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருவார்கள். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் இங்கு வழங்கப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் ரொக்கம், தங்கம், வெள்ளி எனப் பல கோடி மதிப்பிலான பொருட்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்தியா என்பது இறை நம்பிக்கை அதிகம் கொண்ட மக்கள் உள்ள நாடாகும். நினைத்தது நடந்துவிட்டால் பொதுமக்கள் இறைவனுக்குக் காணிக்கையாக தங்களால் முடிந்ததைச் செய்வார்கள். சில கோயில்களில் கிடைக்கும் காணிக்கையைப் பார்த்தால் நாமே ஒரு நொடி ஸ்டன் ஆகிவிடுவோம். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Karnataka temple offbeat

ராகவேந்திர சுவாமி மடத்தில் கொட்டிய நன்கொடை

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் ராகவேந்திர சுவாமி மடம் இருக்கிறது. இது உலகளவில் புகழ் பெற்ற கோயிலாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருவது வழக்கம். சமீபத்தில் இந்த கோயிலில் கிடைத்த காணிக்கைகளை எண்ணும் பணிகள் நடைபெற்றது. அதில் மொத்தம் ரூ.3,48,69,621 ரொக்கம், 32 கிராம் தங்கம் மற்றும் 1.24 கிலோ வெள்ளி காணிக்கையாக வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இணையத்தில் பரவும் வீடியோ

இதற்கிடையே ராகவேந்திர சுவாமி மடத்தில் பல நூறு பூசாரிகள் நன்கொடைகளை எண்ணும் வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஏதோ ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் சேர்ந்த காணிக்கை இல்லை.. வெறும் ஒரே மாதத்தில் சேர்ந்த காணிக்கையாகும். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராகவேந்திர சுவாமியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அந்த கோயிலில் சமீபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் தான் வெறும் 30 நாட்களில் இந்த காணிக்கை பக்தர்களால் வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர்

கர்நாடகாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக இது இருக்கிறது. கடந்தாண்டு பெங்களூருவில் உள்ள இதே ராகவேந்திர சுவாமி மடத்திற்கு பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் வருகை தந்தனர். இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் சுதா மூர்த்தி ஆகியோரும் அப்போது உடன் வந்திருந்தனர்.

நாராயண மூர்த்தி குடும்பத்தினர் வழக்கமாக இந்த கோயிலுக்கு அடிக்கடி சிறப்பு பிரார்த்தனை செய்ய வருவார்கள். அதன்படியே தனது மகள் அக்ஷதா மூர்த்தி மருமகன் ரிஷி சுனக் ஆகியோருடன் கடந்தாண்டு இந்த கோயிலுக்கு வருகை புரிந்தனர். அப்போது சிறப்பு வழிபாடு நடத்திய இவர்கள், கோவிலில் ஆரத்தி எடுக்கும் வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+