கர்நாடகா சிஎம் பதவி: 'ஒக்கலிகா' ஜாதி மடாதிபதி பற்ற வைத்த நெருப்பு.. சித்தராமையா கோஷ்டி கொந்தளிப்பு!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் சித்தராமையா விட்டுத் தர வேன்டும் என அவரது முன்னிலையிலேயே ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமி வலியுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா அரசின் கன்னட மொழி வளர்ச்சித் துறை சார்பில் பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடாவின் 515-வது ஜெயந்தி விழா பெங்களூரில் நடைபெற்றது. இதில் ஒக்கலிகா ஜாதியைச் சேர்ந்த மடாதிபதிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முதல்வர் பதவி டிகே சிவகுமாருக்குதான்..: இந்நிகழ்ச்சியில் பேசிய ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமி, முதல்வர் சித்தராமையா முதல்வர் பதவியை ஏற்கனவே அனுபவித்தவர். ஆகையால் இனி டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும். அப்படி செய்வதுதான் சித்தராமையாவுக்கும் நல்லது. முதல்வர் பதவியை டிகே சிவகுமார் அனுபவிக்கவில்லை. அதனால்தான் டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை தர வேண்டும் என்கிறோம் என்றார்.
அதெப்படி சித்தராமையா முதல்வராக முடியும்?: இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமி, காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இது டிகே சிவகுமாரின் உழைப்பால்தான் சாத்தியமானது. டிகே சிவகுமார்தான் பணமும் செலவு செய்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தவர். ஆனால் எதுவுமே செய்யாத சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இதுபற்றி விரிவாகவும் நான் பேசவிரும்பவில்லை என்றார்.
சித்தராமையா கருத்து: ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் இந்த பேச்சு குறித்து முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சித்தராமையா, முதல்வர் பதவி குறித்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம்தான் முடிவெடுக்கும் என்றார். ஆனால் துணை முதல்வர் டிகே சிவகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சித்து அணி கொந்தளிப்பு: ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் இந்தப் பேச்சுக்கு சித்தாராமையா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகா அமைச்சர் ராஜண்ணா இது குறித்து கூறுகையில், மடாதிபதி சந்திரசேகர சுவாமி காவி உடை அணிவதை நிறுத்திவிடட்டும். நான் காவி உடை உடுத்தவும் தயார். ஆனால் மடாதிபதி சந்திரசேகர சுவாமி காவி உடை அணிவதை நிறுத்தப் போவது இல்லை. அதேபோல முதல்வர் பதவியை சித்தராமையா விட்டுத்தரவும் மாட்டார் என்றார்.
துணை முதல்வர்கள்; கர்நாடகா காங்கிரஸில் கூடுதலாக துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்கிற குரல்கள் ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பின்னணி என்ன?: கர்நாடகாவில் ஒக்கலிகா கவுடா, லிங்காயத் ஆகியவை பெரும்பான்மை ஜாதிகள். டிகே சிவகுமார் ஒக்கலிகா கவுடா ஜாதியைச் சேர்ந்தவர். முதல்வர் சித்தராமையா குருபா ஜாதியைச் சேர்ந்தவர். கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் ஒக்கலிகா ஜாதியினர் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையாக வாக்களித்தனர். இதனால் ஒக்கலிகா ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி இருந்த ஜேடிஎஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அப்போதே டிகே சிவகுமாருக்குதான் முதல்வர் பதவி என வலியுறுத்தப்பட்டது. டிகே சிவகுமாரும் டெல்லி சென்று முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்வராக்கியது. டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications