பாறையில் நின்று நீர் வீழ்ச்சியை ரசித்த இளைஞர்.. திடீரென கால் தவறி அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம், பத்ராவதியில் அரசினங்குடி நீர்வீழ்ச்சியில் 23 வயது இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது அரசினங்குடி நீர் வீழ்ச்சி. இது ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள நீர் வீழ்ச்சியில் தண்ணீர் நிறைய வழிந்தோடுகிறது.
இங்கு சுற்றுலாவுக்காக சரத்குமாரும் அவருடைய நண்பர் குருராஜும் பத்ராவதியிலிருந்து வந்தனர். அவர்கள் 6 கி.மீட்டருக்கு தூரத்திலேயே இறங்கி மலையேற்றம் செய்தனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் இந்த பகுதியில் மலையேற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இவர்கள் இருவரும் வனத்துறையினரின் முன் அனுமதியை பெறாமல் மலையேற்றம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சரத்குமார் ஒரு பாறையில் நின்று கொண்டு இயற்கை அழகை கண்டு களித்தார். அதை குருராஜ் பின்புறம் இருந்து கொண்டு வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தலையை கோதியபடியே நீரை ரசித்துக் கொண்டிருந்த சரத்குமார் அந்த பாறையிலிருந்து வழுக்கி ஓடும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து குருராஜ் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சரத்குமாரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தகவல் அறிந்த சரத்குமாரின் உறவினர்கள் கொல்லூர் வந்துள்ளனர். கொல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சரத்குமார் நின்று கொண்டிருந்த பாறையில் நிறைய பாசிகள் படிந்துள்ளதாம். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தென்னிந்தியாவில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், கபினி அணை உள்ளிட்டவற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அருவிகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.
-
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications