பதற வைக்கும் வீடியோ... முகத்தில் ஒரே குத்து - சுருண்டு விழுந்த குத்துச்சண்டை வீரர்! உயிரே போச்சு
பெங்களூரு: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முகத்தில் குத்து வாங்கிய குத்துச்சண்டை வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
கர்நாடகா தலைநகர் பெங்களூரு ஞான ஜோதி நகரில் உள்ள பாய் சர்வதேச வளாகத்தில் மாநில அளவிலான கிக் பாக்சிங் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன.
இதில் மைசூரை விமலா - சுரேஷ் தம்பதியின் இளைய மகனான நிகில் என்ற 23 வயது வீரர் கலந்துகொண்டார்.

பரபரப்பு வீடியோ
கர்நாடகா மாநில குத்துச்சண்டை சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த குத்துச்சண்டை போட்டியில் நிகிலும் மற்றொரு வீரரும் மோதியபோது, நிகில் முகத்தில் வேகமாக ஒரு குத்துவிட்டார் எதிர் வீரர். இதனால் நிலைதடுமாறிய நிகில் அங்கேயே சுருண்டு விழுந்தார். ஜூலை 10 ஆம் தேதி நிகழ்ந்த போட்டியின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியார் மருத்துவமனையில் அனுமதி
நிகில் முகத்தில் குத்திய வீரர் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட கீழே விழுந்த நிகில், நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. அவரை தூக்க முயன்ற நடுவர் அதிர்ச்சியடைந்து போட்டி ஏற்பட்டாளர்களை அழைத்தார். நிகில் சுயநினைவு இழந்ததை அறிந்த போட்டி ஏற்பட்டாளர்கள் பெங்களூரு நகராபவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிரிழப்பு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகில் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நிகிலின் தாயார் விமலா கூறுகையில் "கடந்த ஜூலை 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய ஒரு நபர் என் மகனுக்கு விளையாடும்போது பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளது." என்று தெரிவித்தார்.

அலட்சியம்
நிகிலின் தந்தை சுரேஷ் தெரிவிக்கையில், "குத்துச்சண்டை அரங்கில் உள்ள தரையில் உள்ள விரிப்பு மிகவும் மெல்லியதாக இருந்தது. முகத்தில் அடிபட்டு கீழே விழுபவருக்கு தரையில்பட்டு கூடுதல் காயங்கள் ஏற்படும். போட்டி ஏற்பாட்டாளர்கள் முதலுதவியை வழங்கவில்லை. குத்துச்சண்டை போட்டி நடக்கும் இடத்தில் மருத்துவக் குழுவினரும் இல்லை. ஆக்சிஜன் மற்றும் ஸ்ட்ரெட்சர் வசதிகளும் அங்கு இல்லை." என்று குற்றம்சாட்டினார்.

வழக்குப்பதிவு
போட்டி ஏற்பட்டாளர் நவீன் ரவி ஷங்கர் இந்த விபத்து நடைபெற்றபோது தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து ஞான பாரதி காவல்துறை அதிகாரிகள், அலட்சியத்தின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக கிக் பாக்சிங் குத்துச்சண்டை போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதாக கூறினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications