Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு ஷாக்.. கர்நாடகாவில் 11-13 இடங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு - உளவுத்துறை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 முதல் 13 தொகுதிகளில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவும், அந்த தொகுதிகள் என்னென்ன? என்பது பற்றியும் உளவுத்துறை அறிக்கை வழங்கி உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே ஜெயித்த காங்கிரசுக்கு இந்த அறிக்கை பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. சரி வாங்க உளவுத்துறையில் இருக்கும் தகவலை பார்ப்போம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் இருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது.

Lok Sabha Election 2024 Intelligence report says that congress may will 11-13 seats in Karnataka

கர்நாடகாவில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏப்ரல் 26ல் முதற்கட்டமாக 14 இடங்களுக்கும், அடுத்ததாக மே மாதம் 7 ம் தேதி 2வது கட்டமாக 14 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் தனித்து போட்டியிட்டது. இதில் காங்கிரஸ், ஜேடிஎஸ் தலா ஒரு இடத்தில் வென்றது. மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதா அம்பரீஷ் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோற்கடித்த காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க பாஜகவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது.

பொதுவாக காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வென்று கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தாலும் கூட லோக்சபா தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை பெறுவது இல்லை. கடந்த 2009 முதல் 2019 வரை 3 தேர்தல்களில் ஒருமுறை கூட காங்கிரஸ் கட்சியின் வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொடவில்லை. குறிப்பாக கடந்த 2019 தேர்தலில் டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் மட்டும் பெங்களூர் புறநகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி உளவுத்துறை மூலம் அறிக்கை கேட்டது. மாநிலத்தில் தொகுதி வாரியாக இருக்கும் நிலவரம், காங்கிரஸ் வேட்பாளர்கள் மீதான மக்களின் பார்வை, கர்நாடகா அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு கிடைத்த வரவேற்பு, மாநிலத்தில் மோடி அலை இருக்கிறதா? உள்ளிட்டவை தொடர்பான அம்சங்களுடன் இந்த உளவுத்துறை அறிக்கை காங்கிரஸ் கட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உளவுத்துறை அறிக்கை என்பது காங்கிரஸ் கட்சிக்கு ‛பாசிட்டிவ்' எனர்ஜியை கொடுத்துள்ளது. ஏனென்றால் வரும் மாநிலத்தில் பல தொகுதிகளில் இப்போது காங்கிரஸ் கட்சிக் ஆதரவான மனநிலையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது மாநிலத்தில் பல தொகுதிகளில் சிட்டிங் எம்பியாக உள்ள பாஜகவினர் மீது எதிர்ப்பு அலை உள்ளது. அதேவேளையில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி செயல்படுத்திய மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 5 அம்ச திட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி பார்த்தால் வரும் லோக்சபா தேர்தலில் 11 முதல் 13 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் புறநகர், கோலார், சிக்கபள்ளாப்பூர், சாமராஜ்நகர், உடுப்பி - சிக்கமகளூர், துமகூரு, சித்ரதுர்கா, ராய்ச்சூர், பீதர், சிக்கோடி, தாவணகெரே ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற நல்ல வாய்ப்புள்ளது.

இதுதவிர ஹாவேரி மற்றும் ஹாசன் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற 50:50 என்ற அளவில் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹாவேரி தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடுகிறார். ஹாசன் தொகுதியில் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வெல் ரேவண்ணா (மாஜி முதல்வர் குமாரசாமியின் அண்ணனான முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன் )போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+