அடடே செம.. நிலவில் தங்கம் கூட இருக்கலாம்! ஆனால் ஒரு ட்விஸ்ட்.. ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
பெங்களூர்: நிலவில் சல்பர், டைடானியம், க்ரோமியம் போன்ற முக்கிய தனிமங்கள் இருப்பதாக சந்திரயான் ரோவர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிலவில் தங்கம் கூட இருக்கலாம் எனறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்வெளித்துறையில் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. சந்திரயான்1 மற்றும் சந்திரயான் 2 விண்கலனை அனுப்பி நிலவு குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

40 நாட்கள் பயணம் மேற்கொண்ட இந்த சந்திரயான் விண்கலம் கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் கருவி வெளியே வந்தது. இந்த ரோவர் கருவி தற்போது நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களை கண்காணித்து வருகின்றனர்.
பிரக்யான் ரோவர் நிலவில் ஆக்சிஜன் வாயு இருப்பதை கண்டுபிடித்தது. மேலும் சல்பர் உள்பட பல தனிமங்கள் நிலவில் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இதுபற்றி இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த கருவி நிலவின் தென்துருவத்தில் சல்பர் இருப்பதை எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி உறுதி செய்துள்ளது.
இதுதவிர அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளது. தற்போது நிலவில் ஹைட்ரஜன் வாயு இருக்கிறதா? என்பதை ரோவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது'' எனத் தெரிவித்து இருந்தது. தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ரோவர் தனது வாழ்நாளில் பாதி நாட்களை கடந்து விட்டது.
அதாவது நிலவின் ஒருநாளில் மட்டுமே ஆய்வு செய்யும் திறனுடன் ரோவர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நிலவில் சல்பர், டைடானியம், க்ரோமியம் போன்ற முக்கிய தனிமங்கள் இருப்பதாக சந்திரயான் ரோவர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், நிலவில் தங்கம் கூட இருக்கலாம் எனறு ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் தகவலாக உள்ளது. இருந்தாலும் அதன் அளவு மிக மிக குறைவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு வேதியியல் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன் கூறியதாவது:- தங்கத்தை நோபல் மெட்டல் என Au என பூமியில் சொல்வோம். தங்கத்தை வெட்டி எடுக்கக்கூடிய முறையும் வித்தியாசமானது. உலகம் முழுவதும் கேள்வி கேட்கக் கூடிய முறையாகவும் உள்ளது. தங்கம் என்பதை அலுமினிய சாயிலில் இருந்து எடுக்கிறோம். சைனடு கொட்டி அதில் இருந்து எடுக்கிறோம்.
அதில் இருந்து கிடைக்கும் தங்கத்தின் அளவும் மிக குறைவு. நகை ஆபரணம் என்பதை தாண்டி அதில் தங்கத்திற்கு பெரிய மவுசு இல்லை. இப்படிப்பட்ட தங்கமும் கூட நிலவில் இருப்பதாக ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதன் அளவு மிக மிக குறைவு. அதே மாதிரி நிலவில் சுமார் 600 இடங்களில் மட்டுமே இதுவரை பார்க்க முடிந்துள்ளது.
நிலவு என்பது பெரிய விஷயம். ஆங்கிலத்தில் காம்ப்ளக்ஸ் என்று சொல்வோம். பல விதமான சீதோஷ்ண நிலைகளை கொண்டது. ஆழ்பகுதிகளில் இன்னும் போய் பார்க்கவில்லை. இதையெல்லாம் ஆய்வு செய்தால் பல விதமான வித்தியாசமான தனிமங்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications