24 வயது தான்! நெஞ்சு வலிக்குதே.. துடிதுடித்த தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை.. மாரடைப்பால் பலி
பெங்களூர்: 24 வயது மட்டுமே நிரம்பிய தேசிய அளவிலான பிரபல வாலிபால் வீராங்கனைக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவடம்ட பெல்தங்கடி தாலுகாவில் உள்ள படங்கடி பொய்குட்டே கிராமத்தை சேர்ந்தவர் ஆதம். இவரது மனைவி ஹவ்வம்மா. இந்த தம்பதியின் மகள் சாலியாத் (வயது24). இவர் சிறுவயது முதலே வாலிபால் போட்டியில் ஆர்வமாக இருந்தார்.

மேலும் வாலிபால் போட்டிகளில் பங்கேற்று திறமையாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனையாக உருமாறினார். கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலியாத்துக்கும், சிக்கமகளூரை சேர்ந்தவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர் சிக்கமகளூரில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் தான் நேற்று சாலியாத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் கூட சிகிச்சை பலனின்றி சாலியாத் இன்று காலமானார். நெஞ்சுவலியால் இறந்த சாலியாத் நிறைய பதக்கங்களை பெற்றுள்ளார்.
தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம், சீனியர் தேசிய தென் மண்டல போட்டியில் தங்க பதக்கம் மற்றும் ஜூனியர் தேசிய போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் கர்நாடக மாநில அணியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் தான் அவர் தனது 24வது வயதில் மாரடைப்பால் காலமாகி உள்ளார்.
சாலியாத் தனது துவக்க கல்வியை படங்கடியில் பயின்றார். 9 ம் வகுப்பை உஜிரேயில் உள்ள பள்ளியிலும், 10ம் வகுப்பை முண்டாஜெ பகுதியிலும், பட்டப்படிப்பை உஜிரேயிலும் பயின்றார். பியூ மற்றும் டிகிரி படிப்பின்பாதுடு கல்லூரி காலத்தில் அவர் வாலிபால் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்தார். கர்நாடகா வாலிபால் அணியில் இடம்பிடித்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications