நிழலே இல்லையே.. உடனே வெளியே போய் பார்த்தீங்களா? 12.17 மணி டூ 12.23 வரை ஆச்சரியம்.. அட சென்னையிலும்
பெங்களூர்: இன்று பெங்களூருவில் "ஜீரோ ஷேடோ டே" என்று அழைக்கப்படும் நிழல் இல்லாத நாளாக அறியப்பட்டது.. இப்படிப்பட்ட அரிய நிகழ்வு இன்று மதியம் 12.17 மணிக்கும், அதன் விளைவுகள் மதியம் 12.23 மணிக்கும் பெங்களூருவில் நடந்தது.
வானியலில் எத்தனையோ அரிய நிகழ்வுகள் ஏற்பட்டு, நம்மை சிலிர்க்க வைத்துவிடுகின்றன.. அப்படித்தான், இந்த நிழல் இல்லா நாளும் வியப்பை தருகிறது..

நிழல் : நிழல் இல்லாத நாள் என்றால் என்ன? இந்த நாள் ஏன் மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது தெரியுமா? எப்போதுமே சூரிய ஒளியின்கீழ் நாம் நிற்கும்போது நம்முடைய நிழல், காலையில் மேற்கு நோக்கியும், சாயங்கால நேரத்தில், கிழக்கு நோக்கியும் என நீண்டு அமையும். இதுபோன்ற நேரங்களில் நம்முடைய நிழல் பூமியின் மீது விழும்...
ஆனால், குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் செங்குத்தாக நிழல் அமையும்... இந்த நாட்களில் நண்பகலில், நம்முடைய நிழல் நீளாமல், காலடியின் கீழேயே அமையும்... இதற்குதான் நிழல் இல்லா நாள் என்பார்கள்.. அல்லது பூஜ்ய நிழல் நாள் என்றும் சொல்வார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது சூரிய கதிர்வீச்சு நேர் செங்குத்தாக விழக்கூடிய நாளாகும்.
அரிய நிகழ்வு: வருடத்தில் 2 முறை இப்படியான நிகழ்வு நடக்கும்.. அந்தவகையில், இந்த வருடத்துக்கான நிழல் நாள், பெங்களூருவில் இன்று ஏற்பட்டுள்ளது. பூமியின் சாய்வு மற்றும் சூரியனை சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையின் காரணமாகவே இப்படியான நிகழ்வு நடப்பதாகவும், சூரியன் உச்சியில் இருக்கும் வரை இந்த நிழலை பார்க்க முடியாது என்றும் சொல்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்..

நிழல் இல்லாத நாளின்போது, அட்சரேகையின் +23.5 மற்றும் -23.5 டிகிரி புள்ளிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் 2 முறை இந்த நிகழ்வு உண்டாகிறது. அதன்படி இது பெங்களூருவில் இன்று மதியம் 12:17 மணிக்கு நிகழவுள்ளது.. இதன் விளைவுகளை மதியம் 12:23 மணி வரை காணலாம்.. பெங்களூரு கோரமங்களாவில் அமைந்து உள்ள இந்திய வான் இயற்பியல் நிறுவனம் (IIA) உறுதிப்படுத்தியிருக்கிறது..
விஞ்ஞானிகள்: அதன்படி இன்று மதியம் 12.17 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தார்கள்.. இந்திய வானியற்பியல் நிறுவனம் அதன் வளாகத்தில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்த நிகழ்வு சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும் என்றாலும், அதன் தாக்கத்தை இரண்டு நிமிடங்கள் வரை கவனிக்க முடியும்.. அதாவது ஜீரோ ஷேடோ டே பொதுவாக, ஒரு வினாடியின் ஒரு பகுதியே நீடிக்கும் என்றாலும், அதன் விளைவுகளை இரண்டு நிமிடங்களுக்கு பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்து.

+23.5 மற்றும் -23.5 டிகிரி அட்சரேகைக்கு இடையில் அமைந்துள்ள இடங்களில் வருடத்துக்கு 2 முறை நடக்கக்கூடிய இந்த நிகழ்வின்போது, அனைத்து பொருட்கள் மற்றும் உயிரினங்களின் நிழல்கள் மறைந்துவிடும்... சூரியன் நேரடியாக உச்ச நிலையில் இருக்கும்போது, அது எந்த பொருளின் மீதும் நிழலை ஏற்படுத்தாது என்று ஏஎஸ்ஐ எனப்படும் இந்திய வானியல் சங்கம் கூறுகிறது.. கடந்த வருடம் ஏப்ரல் 25 மற்றும் ஆகஸ்ட் 18 ஆகிய 2 தேதிகளில் பெங்களூரில் பூஜ்ஜிய நிழல் நாட்கள் அறியப்பட்டன..
சென்னை: கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையே இருக்கும் இடங்களில் இது நிகழும் .. எனவே, பெங்களூரு மட்டுமல்லாமல், சென்னை, மும்பை, புனே போன்ற நகரங்களிலும் பூஜ்ஜிய நிழல் நாட்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.. அதன்படி, ஏப்ரல் 24ம் தேதி சென்னையிலும் நிழல் விழாது.. சூரியன் நேரடியாக தலைக்கு மேலே விழுவதால், நிழல் உங்களுக்கு அடியில் சென்றுவிடும்.
உதாரணத்துக்கு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து, அதன் நிழல் விழவில்லையா? என்பதை நீங்களே வீட்டிலிருந்தபடியே நேரடியாகவே பார்க்க முடியும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

செங்குத்து: அதன்படியே, இன்று சரியாக மதியம் 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழவில்லை... இந்த அரிய நிகழ்வை பெங்களூர்வாசிகள் தங்கள் வீடுகளிலிருந்தே நேரடியாகவே சோதித்து பார்த்தனர்.. உயரமான பொருளை செங்குத்தாக வைத்து, அதன் பிம்பம் தரையில் விழுகிறதா? என்று பார்த்தார்கள்.. நிழல் சுத்தமாக விழவில்லை. அதேபோல, தங்கள் தலைக்கு மேல செல்போனை உயர்த்தி பிடித்தும் தங்கள் நிழலை கண்டறிய முற்பட்டனர். அதிலும் நிழல் எதுவுமே விழவில்லை.
அதுபோலவே, இந்திய நகரங்களான சென்னை, மும்பை, புனே போன்ற பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் நிகழ்ந்துள்ளது.. பள்ளி, கல்லூரிகள், அறிவியல் மையங்களில், இன்று மதியம் 12:17 மற்றும் 12:23 க்கு இடையில் நிகழும் இந்த நிகழ்வினை ஏராளமானோர் கண்டு வியப்படைந்தனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications