மக்கள் எங்கள் பக்கம்..வெற்றியை பரிசளித்த அனைவருக்கும் நன்றி..காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
பெங்களூரு: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறிய மல்லிகார்ஜூன கார்கே மக்கள் எங்கள் பக்கம் இருந்தனர் என்று உணர்ச்சி பெருக்குடன் பேசியுள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், 129 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலைபெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. அதேவேளை, 66 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் உள்ள பாஜக கர்நாடகத்தில் ஆட்சியை இழக்கிறது. கடந்த முறை 104 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை 66 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கண்ணீர் மல்க கொண்டாடி வருகின்றனர். வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி வருகின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநிலத்தில் உள்ள அரசுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலில் ஆள் அம்பு படை என அனைத்து வகையிலும் தேர்தல் வேலை செய்தனர். அவர்களின் வெறுப்பு அரசியல் இங்கே வேலை செய்யவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய கார்கே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஜனநாயக ரீதியாக மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தோம். மக்களின் மனம் ஒன்றுபோல இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள், தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு இந்த வெற்றியை பரிசளித்துள்ளனர். எங்கள் கட்சியின் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications