கோலார் தொகுதி ஆபத்து.. வருணாவுக்கு போங்க! சித்தராமையாவை எச்சரித்த ராகுல், கார்கே! ஏன் முக்கியம்?

கர்நாடகாவில் காங்கிரஸ் முகமாக சித்தராமையா உள்ள நிலையில் வரும் தேர்தலில் கோலாரில் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் அவரது மகன் எம்எல்ஏவாக உள்ள வருணாவில் களமிறங்கும்படி ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே அறிவுறுத்தி உள்ளன

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் முகமாக சித்தராமையாக உள்ள நிலையில் அவர் கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் தான் கோலார் தொகுதியில் போட்டியிட வேண்டாம். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள சொந்த தொகுதியான மகன் யதீந்திரா எம்எல்ஏவாக உள்ள வருணாவில் போட்டியிடும்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் எச்சரித்து அறிவுறுத்தி உள்ளனர். இதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் நடக்க வாய்ப்புள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அங்கு அனைத்து கட்சியினரும் வியூகங்கள் வகுக்க தொடங்கி உள்ளன. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் மாநிலம் முழுவதும் யாத்திரைகள் நடத்தி வருகின்றன.

ஜேடிஎஸ்ஸில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாறாக பாஜக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் சில தலைவர்கள் தொகுதி மாறி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 கோலாரில் போட்டியிடுவதாக அறிவிப்பு

கோலாரில் போட்டியிடுவதாக அறிவிப்பு

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாக கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் அளித்தால் அந்த தொகுதியில் களமிறங்குவதாக கூறினார். கடந்த 2018 ம் ஆண்டு நடந்த தேர்தலில் சித்தராமையா தான் எம்எல்ஏவாக இருந்த மைசூரு மாவட்டம் வருணா தொகுதியை மகன் யதீந்திராவுக்கு விட்டு கொடுத்துவிட்டு அங்குள்ள சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் பாதாமியில் மட்டும் சித்தராமையா வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் தற்போது சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

துவங்கிய பிரசாரம்

துவங்கிய பிரசாரம்

மேலும் அடிக்கடி கோலார் தொகுதிக்கு சென்று அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளையும் செய்தார். இங்கு சித்தராமையா சார்ந்த குருபா சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம் மக்கள் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் உள்ளதால் அவர் கோலார் தொகுதியில் கண்வைத்தார். இருப்பினும் கூட கட்சி தலைவர்கள் இடையேயான பிரச்சனை என்பது அவருக்கு மைனஸாக பார்க்கப்பட்டது.

டெல்லியில் ஆலோசனை

டெல்லியில் ஆலோசனை

இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக டெல்லியில் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் எச்சரித்து அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 கோலார் வேண்டாம் என அட்வைஸ்

கோலார் வேண்டாம் என அட்வைஸ்

இதுதொடர்பாக அவர்கள் 2 பேரும் சித்தராமையாவிடம் பல்வேறு விஷயங்களை மேற்கொள்காட்டி உள்ளனர். அதாவது கட்சி சார்பாக சர்வே மேற்கொள்ளப்பட்டதில் கோலாரில் வெற்றி பெறுவது என்பது சுலபமாக இருக்காது. சிரமப்பட வேண்டி இருக்கும். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடையேயான பிரச்சனை என்பது தேர்தல் வெற்றியை பாதிக்கும். மேலும் பாஜக, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சேர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வேறு தொகுதியில் போட்டியிட வேண்டும். மேலும் வரும் தேர்தலில் மகன் யதீந்திராவுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும். முதலில் உங்களின் வெற்றி பற்றி யோசனை செய்யுங்கள். இதனால் மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிடுங்கள் என கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 சித்தராமையா சொன்னது என்ன?

சித்தராமையா சொன்னது என்ன?

மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக உள்ளதால் அனைத்து இடங்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும். இதனால் வெற்றி வாய்ப்புள்ள சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிடுவது தான் சரியாக இருக்கும். இதை கேட்ட சித்தராமையா, ‛‛கோலார் தொகுதி நிலவரம் என்ன என்பது எனக்கு தெரியும். வருணாவிவில் போட்டியிட்டால் ஒன்று அல்து 2 முறை சென்று வந்தாலே மக்கள் ஆதரவு தருவார்கள். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்யவும் வாய்ப்பு உருவாகும். இதுபற்றி யோசனை செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

தொகுதி மாற வாய்ப்பு

தொகுதி மாற வாய்ப்பு

மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் முதல்வர் பதவி என்பது சித்தராமையா அல்லது மாநில காங்கிரஸ் தலைவர் டிகேசிவக்குமார் ஆகியோரில் ஒருவருக்கு தான் கிடைக்கும். இதில் சித்தராமையாவுக்கு தான் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால் சித்தராமையா வரும் தேர்தலில் கோலாரில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர் வருணா தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

ஒரேயொரு பிரச்சனை

ஒரேயொரு பிரச்சனை

இருப்பினும் கூட தற்போது வருணா தொகுதியில் சித்தராமையின் மகன் யதீந்திரா எம்எல்ஏவாக உள்ளார். ஒருவேளை தான் அங்கு போட்டியிட்டால் யதீந்திராவின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என சித்தராமையா யோசனை செய்ய தொடங்கி உள்ளனர். இதுதான் தற்போது சித்தராமையாவுக்கு பிரச்சனையாக உள்ளது. மேலும் இதுதொடர்பாக சித்தராமையா தற்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையை தொடங்கி உள்ளார். மேலும் சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது பற்றிய முடிவு மார்ச் 25ல் இறுதி செய்யப்பட உள்ளது. 2வது கட்டமாக அன்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் முக்கிய முடிவு அப்போது எடுக்கப்பட உள்ளது.

 சித்தராமையாவுக்கு போட்டி யார்?

சித்தராமையாவுக்கு போட்டி யார்?

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கையை பாஜக உற்று கவனித்து வருகிறது. அதன்படி வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிட்டால் அவரை வீழ்த்தும் வகையில் பலம் வாய்ந்த பாஜக வேட்பாளரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா களமிறக்குவது குறித்து பரிசீலனை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+