விமானத்தை அலற விட்ட "தெருநாய்.." புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய பெங்களூர் விமானம்.. நடந்தது இதுதான்
பெங்களூர்: பெங்களூரில் இருந்து கோவாவிற்கு சென்ற விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடுபாதையின் குறுக்கே நாய் புகுந்ததால் தரையிறங்காமல் மீண்டும் பெங்களூருக்கே திரும்பி சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் தரையிறங்குவதற்கு அனுமதி கிடைக்காது. இதனால், விமானங்கள் வானத்திலேயே வட்டமடித்து விட்டு மீண்டும் அனுமதி கிடைத்த பிறகு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும். வானிலை மோசமாக இருந்தாலும் இதே நிலைதான்.. சில நேரங்கள் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே விமானங்கள் திரும்பி செல்வதையும் அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம்.

இன்னும் சில சமயத்தில் விமான பயணிகள் யாருக்கேனும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ... பயணிகள் நடுவானில் விமானத்தில் ரகளையில் ஈடுபட்டாலோ... அவசரமாக அருகில் உள்ள விமான நிலையங்களில் விமானம் தரையிறக்கப்படும். பயணிகளும் நிலமையின் தீவிரத்தை உணர்ந்து இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், கோவாவில் தெருநாய் ஒன்றால் விமானம் தரையிறங்காமல் மீண்டும் புறப்பட்ட இடமான பெங்களூருக்கே திரும்பி சென்றுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
குறுக்கே வந்த தெருநாய்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கோவாவிற்கு விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான UK 881 என்ற விமானம் சென்று கொண்டு இருந்தது. நேற்று மாலை இந்த விமானம் கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. அப்போது விமானத்தின் ஓடுபாதையில் தெரு நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால், விமானம் தரையிறங்குவதை சற்று நிறுத்தி வைக்குமாறு கூறப்பட்டது.
விமானம் தரையிறங்குவதை சற்று நிறுத்தி வைக்குமாறு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், விஸ்தாரா விமானத்தின் விமானியை கேட்டுக்கொண்டனர். ஆனால், விமானி மீண்டும் பெங்களூருக்கே திரும்பி செல்ல முடிவு செய்து திரும்பி சென்றுள்ளார். பெங்களூரின் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து நேற்று நண்பகல் 12.55 மணிக்கு புறப்பட்ட விஸ்தாரா விமானம், மீண்டும் பிற்பகல் 3.05 மணிக்கு பெங்களூருக்கே திரும்பி வந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தான் முதல்முறை: பின்னர் மீண்டும் பெங்களூரில் இருந்து 4.55 மணிக்கு புறப்பட்ட விமானம் கோவாவிற்கு 6.15 மணிக்கு சென்று சேர்ந்துள்ளது. இது தொடர்பாக விஸ்தாரா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பெங்களூரில் இருந்து கோவாவிற்கு புறப்பட்ட UK881 என்ற விமானம் கோவா விமான நிலைய ஓடுதளத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் பின்னர் மாலை 6.15 மணிக்கு மீண்டும் கோவா சென்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கோவா விமான நிலைய இயக்குனர் எஸ்.வி.டி தன்மஜ்யா ராவ் இது தொடர்பாக கூறுகையில், "விமான நிலைய ஓடுதளத்திற்குள் தெருநாய்கள் ஓடி வரும் நிகழ்வுகள் சில சமயம் நடந்து இருக்கிறது. உடனடியாக அங்கு இருக்கும் ஊழியர்கள் நாய்களை விரட்டி பாதைக்கு இடையூறு எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், இதுபோன்ற சம்பவம் நடப்பது எனது பணிக்காலத்தில் இதுவே முதல் முறை" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications