நீங்கல்லாம் நிஜமாவே டீச்சர்தானா.. "டிரஸ்சில் லைட்டா.." அதுக்கு வெந்நீரை ஊற்றுவீங்களா?
பெங்களூர்: ஆடையில் மலம் கழித்த 7 வயது சிறுவன் மீது ஆசிரியர் கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கூடம் தான் ஒரு குழந்தையின் இரண்டாவது வீடு எனக் கூறுவார்கள். ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்கள் அப்படிதான் இருந்தன. தன்னிடம் பயிலும் குழந்தையை தனது பிள்ளைகளாகவே கருதிய ஆசிரியர்கள் ஏராளம்.
சரியாக படிக்காத மாணவர்களை மாலை நேரங்களில் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்பும் ஆசிரியர்களும் இருக்கவே செய்தார்கள்.
ஆனால் காலம் மாற மாற, ஆசிரியர்களின் மனோபாவங்களும் மாறிவிட்டன. ஆசிரிய பணி அறப்பணி என்பதை மறந்து ஏதோ சம்பளத்துக்காக வேலைக்கு வரும் ஆசிரியர்கள்தான் இன்று நிறைய பேர் இருக்கின்றனர்.

இரக்கமற்ற ஆசிரியர்கள்
இதுபோன்ற ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களை தொல்லைகளாகவே பார்க்கின்றனர். அவர்களிடம் இரக்கமே இல்லாமல் மோசமாக நடந்து கொள்கின்றனர். அதுவும், ஆரம்ப வகுப்புகளில் இதுபோன்ற மனோபாவம் கொண்ட ஆசிரியர்கள் இருந்தால், மாணவர்களின் நிலை பரிதாபம்தான். சிறு பிள்ளைகள் என்பதால் பள்ளியில் நடந்ததை சரியாக வீட்டில் சொல்ல தெரியாமலும், அப்படியொரு கொடூர சம்பவம்தான் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

மலம் கழிக்க அனுமதிக்கவில்லை
கர்நாடகா மாநிலம் ராய்சூர் மாவட்டத்தில் உள்ள சன்ட்டேகல்லூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் ஒருவன், நேற்று தனது வகுப்பு ஆசிரியர் ஹுலிகெயப்பாவிடம் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டுள்ளான். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த ஆசிரியர், வகுப்பு முடிந்த பிறகு செல் எனக் கூறியுள்ளார். ஆனால், இயற்கை உபாதையை அடக்க முடியாத சிறுவன், ஆடையிலேயே மலம் கழித்துவிட்டான்.

கொதிக்கும் நீரை..
இதனை பார்த்து கோபமடைந்த ஆசிரியர், கொதிக்கும் நீரை எடுத்து வந்து மாணவன் மீது ஊற்றினார். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறித் துடித்திருக்கிறான். அவனது அலறல் சத்தத்தை கேட்டு அங்கு மற்ற வகுப்பு ஆசிரியைகளும், மாணவர்களும் வந்து பார்த்துள்ளனர்.
இதையடுத்து, சிறுவனை அங்குள்ள மருத்துவமனையில் அவர்கள் கொண்டு சேர்த்தனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை நடவடிக்கை இல்லை
இந்நிலையில், அந்த கொடூர ஆசிரியர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பள்ளியில் நடந்த விஷயம் பற்றி கேள்விப்பட்டோம். ஆனால் மாணவனின் பெற்றோர் தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. மேலும், இது பள்ளிக்கல்வித் துறைக்கு கீழ் வருவதால் அந்த துறை சார்பிலாவது எங்களுக்கு புகார் தர வேண்டும். அதுவும் வரவில்லை" என்றார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரை புகார் கொடுக்கக் கூடாது என உள்ளூர் கட்சிக்காரர்கள் சிலர் மிரட்டுவதாக தகவலறிந்த உள்ளூர் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு
கர்நாடகாவின் தும்கூரு நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சில தினங்களுக்கு முன்பு 3 வயது பட்டியலின சிறுவன், ஆடையில் மலம் கழித்ததற்காக அவனது பிறப்புறுப்பில் ஆசிரியை சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியை ராஷ்மி (28) மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடூர சம்பவம் நடந்த ஒரு சில நாட்களிலேயே மேலும் அதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications