பெங்களூர் தமிழ் புத்தக திருவிழா இன்றே கடைசி நாள்.. மாணவர்களுக்கு பரிசு கூப்பன்.. மிஸ் பண்ணாதீங்க
பெங்களூர்: கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூரில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இன்று இந்த புத்தக திருவிழாவின் கடைசி நாளாகும். இரவு 8 மணி வரை மக்கள் சென்று விருப்பமான புத்தகங்களை வாங்கி செல்லலாம். இன்றைய விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் பங்கேற்கிறார்.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூரில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 3ம் தமிழ் புத்தக திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 20ம் தேதி இந்த புத்தக திருவிழா தொடங்கியது.

இன்று கடைசி நாளாகும் இன்று காலை 10 மணிக்கு புத்தக திருவிழா தொடங்கி விட்டது. இன்று இரவு 8 மணி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், கன்னடம் மொழிகளில் புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன.
பெங்களூர் குயின்ஸ் ரோட்டில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பில்டிங்கிற்கு எதிரே The Institution of Engineers கட்டிட வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. டூவீலர், நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி உள்ளது. கடைசி நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு ‛நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு' வழங்கும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை 5.00 மணிக்கு நிறைவு விழா மற்றும் கர்நாடகத் தமிழ் விருது-2024 வழங்கும் விழா நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டு செய்த சான்றோர்களுக்கு சிறப்பு செய்யப்பட உள்ளது. சிறப்பு விருந்தினராக பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவரான டாக்டர் வி.ராம் பிரசாத் மனோகர் ஐ.ஏ.எஸ். பங்கேற்கிறார்.
இந்த விழாவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தக கூப்பன்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன. எல்கேஜி முதல் எம்பிபிஎஸ் வரை எந்த மாணவராக இருந்தாலும் இந்த புத்தக கூப்பன்களை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு கூப்பனும் 100 ரூபாய் மதிப்பு கொண்டது. இந்த கூப்பன் மூலம் வாங்கும் புத்தகத்துக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை புத்தக விலையே ரூ.100க்கு உள்ளே என்றால் புத்தகத்தை நீங்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
மொத்தம் ரூ.3 ஆயிரம் கூப்பன்கள் இதுபோல தரப்பட்டுள்ளன. ஆக மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கூப்பன்களை பெங்களூர் நகர குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மானோகர் சொந்த பணத்தில் வழங்கி உள்ளார். இந்த கூப்பன் சீட்டுகளில், "புத்தகத்தை வாசியுங்கள்! உங்கள் வெற்றிக்கு வழிகாட்ட சகோதரனாக காத்திருக்கிறேன்" என்ற வாசகம் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் படத்துடன் இடம்பெற்றுள்ளது. அதிகாரியை தொடர்புகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications