முடங்கும் பெங்களூர்.. உச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. ஆன்லைன் கல்விக்கு மாறும் பள்ளிகள்! இது ரொம்ப மோசம்
பெங்களூர்: பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தால் அப்பார்ட்மெண்ட்கள், தொழிற்சாலைகள் பாதித்துள்ள நிலையில், இப்போது அந்த தண்ணீர் பற்றாக்குறை அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் பாதித்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.

தண்ணீர் பஞ்சம்: இதற்கிடையே இந்த தண்ணீர் பஞ்சம் இப்போது பெங்களூரில் இருக்கும் கல்வி நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் பன்னர்கட்டா சாலையில் உள்ள அபீக் அகாடமி என்ற தனியார் வீட்டுப் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அந்த பள்ளி மூடப்படுவதாகவும் அடுத்த வாரம் உள்ள நிலைமையைப் பொறுத்து பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அந்த பள்ளியின் நிறுவனர் இந்திரா ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கடந்த ஒரு வாரமாக ஆழ்துளைக் கிணறு வறண்டு கிடக்கிறது,. தண்ணீர் டேங்கர்களுக்கு பலமுறை அழைப்பு விடுத்தும், அவர்கள் வரவில்லை. தண்ணீர் டேங்கர்கள் இப்போது அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் எங்களால் உடனடியாக நீரைப் பெற முடியவில்லை..
தண்ணீர் இல்லாமல் எங்கள் பள்ளியை நடத்தினால் அது அபாயத்தை ஏற்படுத்தும் என்பது தெரியும். எனவே, பிரச்சினை தீரும் வரை, பள்ளியைத் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளோம். பெற்றோருக்கும் இது குறித்துக் கூறியுள்ளோம். அவர்களும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தருகிறார்கள்" என்றார். தனியார்ப் பள்ளிகள் மட்டுமில்லை அரசுப் பள்ளிகளுக்கும் கூட இதே நிலை தான். அங்கே ஓசகெரேஹள்ளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் போர்வெல் தண்ணீர் இல்லாததால், குடிநீருக்குத் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளிலும் பாதிப்பு: இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "நாங்கள் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகிறோம், எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தண்ணீர் நெருக்கடி இருக்கிறதா என்பதைக் கவனித்து வருகிறோம். ஹோசகேரஹள்ளி அரசுப் பள்ளி மட்டுமே நெருக்கடியில் தத்தளிக்கிறது. மற்ற வழிகளில் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய முயன்று வருகிறோம்.
ஆழ்துளைக் கிணறு வறண்டு விட்டது. எனவே, தற்போதைக்கு குடிநீர் அல்லாத தேவைகளுக்கு டேங்கர் லாரியை ஏற்பாடு செய்துள்ளோம். குடிநீர்த் தேவைக்கு மினரல் வாட்டர் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். பள்ளிக்கான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய மற்றொரு போர்வெல் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.
மிக மோசம்: பள்ளிகள் கூட தொடர்ந்து இயங்க முடியாத அளவுக்குப் பெங்களூரில் மிக மோசமான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு சில பள்ளிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை மேம்படவில்லை என்றால் வரும் நாட்களில் மேலும் பல பள்ளிகள் இதனால் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆன்லைன் கல்வி முறைக்கும் பெங்களூர் கல்வி நிறுவனங்கள் மாறி வருகிறது..
கட்டணம் நிர்ணயம்: தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த சூழலைப் பயன்படுத்தி வாட்டர் டேங்கர் நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து தண்ணீர் டேங்கர்களுக்கான கட்டணத்தை அம்மாநில அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும், அடுத்த நான்கு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 200 தனியார் டேங்கர்கள் உடன் ஒப்பந்தத்தையும் போட்டுள்ளது.
அதன்படி 5 கிமீ தூரத்திற்கு.. 6,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 8,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு 700 ரூபாயும், 12,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு 1,000 ரூபாயும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் 5 கிமீ முதல் 10 கிமீ வரையிலான தூரம் என்றால் 6,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு ரூ.750 வசூலிக்கப்படும் நிலையில், 8,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு 850 ரூபாயும் 12,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு 1,200 ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications