WFH எம்ப்ளாயீஸ் தான் பிரைம் டார்க்கெட்.. அடுத்தடுத்து வேலையில் தூக்கப்படும் ஐடி ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வொர்க் ப்ரம் ஹோம்மில் வேலை செய்யும் ஊழியர்களை தான் முதல் டார்க்கெட்டாக வைத்து ஐடி நிறுவனங்கள் வேலையை விட்டு தூக்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களுர், ஹைதராபாத், சென்னை மற்றும் புனே என ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள நகரங்களில் வேலை செய்யும் ஐடி பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளார்கள். ஏஐ தாக்கம் காரணமாக இந்த வேலை இழப்பு ஏற்படுகிறது என்றாலும், புதிதாக ஏஐ சார்ந்த தொழில்நுட்பங்களை கற்றவர்களை ஐடி நிறுவனங்கள் அதிக சம்பளத்தில் வேலைக்கு எடுக்கின்றன.

இன்றைக்கு ஐடி என்ஜினியர்கள் எந்த அளவிற்கு அதிக சம்பளத்தில் வேலைக்கு சேருவதாக கேள்விப்பட்டீர்களோ, அதே அளவுக்கு ரிஸ்க்கும் அவர்களுக்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு ஐடி நிறுவனங்களும் ஏஐ மூலம் வழக்கமான பணிகளை மேற்கொள்ள விரும்புகின்றன. இதனால் சாதாரண பணிகளை மேற்கொண்டவர்கள், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு மேம்படாதவர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது. ஏஐ சார்ந்த பணிகளும் அதிக தேவை எழுந்துள்ள அதே நேரத்தில், ஏஐ செய்ய முடியும் என்ற நிலை உள்ள பல்வேறு ஐடி பணிகளுக்கு படிப்படியாக பணியாளர்கள் நீக்கப்பட்டு வருகிறார்கள்.

WFH employees are the prime target IT workers are being laid off one after another
Photo Credit:

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஐடி துறையில் இப்போது வழக்கமான கோடிங், டேட்டா என்ட்ரி மற்றும் சில நிர்வாகப் பணிகளை ஏஐ எளிதாக மேற்கொள்கிறது. இதனால் இந்த பணிகளை மேற்கொண்டு வந்த ஐடி பணியாளர்கள் இனி ஐடி நிறுவனங்களுக்கு தேவை இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களில் அடுத்த கட்ட திறனை வளர்த்து கொள்ளாதவர்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு தேவையில்லை என்று கருதப்படும் நபர்கள் எந்த முறையான அறிவிப்பும் இன்றி வேலையைவிட்டு செல்லும், ராஜினாமா கடிதம் அளிக்குமாறு வற்புறுத்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், அமேசான், யுபிஎஸ், மைக்ரோசாப்ட், மெட்டா, விப்ரோ, டிசிஎஸ், அசன்சர் உள்பட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. இந்த ஆண்டில் அதிகப்படியான ஐடி பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக வொர்க் ப்ரம் ஹோம்மில் வேலை செய்யும் ஊழியர்களை தான் முதல் டார்க்கெட்டாக வைத்து ஐடி நிறுவனங்கள் வேலையை விட்டு தூக்கி வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா காலத்திற்கு பிறகு ஏராளமான ஐடி ஊழியர்கள் ஹொர்க் ப்ரம் ஹோம் என்ற அடிப்படையில் வீட்டில் இருந்தே வேலை செய்து வந்தார்கள். அவர்கள் தான் பணி நீக்கத்திற்கு அதிகம் ஆளாவதாக ஐடி நிறுவன ஊழியர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள். யாரெல்லாம் வீட்டில் இருந்து வேலை செய்யவே முடியாதோ, அவர்கள் பணியில் தொடர்வாகவும் கூறப்படுகிறது. இந்த போக்கு அண்மை காலங்களில் அதிகரித்து வருவதாக ஐடி ஊழியர்கள் பலர் புலம்பி வருகிறார்கள். வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்றாலும், உடனடியாக ஏற்படும் அழுத்தத்தை தாங்க முடியாமல் பலர் தவிக்கிறார்கள்.

ஐடி நிறுவனங்களில் வேலை இழப்பு என்பது வெறும் ஏஐ மட்டும் காரணமாக இல்லை.. பணியில் சோர்வாக உள்ளவர்கள், சரியாக செயல்பட முடியாதவர்கள், கூடுதல் திறனை வளர்த்துக் கொள்ளதவர்கள் குறிவைத்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாம். அதேநேரம் . ஏஐ, மெஷின் லேர்னிங் என்ஜினியர்கள், டேட்டா சயின்டிஸ்ட்கள், ஏஐ மாதிரி சரிபார்ப்பவர்கள், ஏஐ ப்ராம்ப்ட் இன்ஜினியர்கள் போன்றவர்களுக்கு ஐடி உலகில் டிமாண்ட் அதிகரித்து வருகிறது.

ஐடியில் வழக்கமான என்ஜினியர்களைவிட, ஏஐ தொடர்பான திறன்களை (AI literacy, Python, TensorFlow, PyTorch) வளர்த்துக் கொண்டர்கள் மிக அதிக சம்பளத்தில் ஐடி நிறுவனங்களால் வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள். எனவே வரும் காலத்தை சரியாக கணித்து செயல்படுவர்கள், காலத்திற்கு தகுந்தாற் போல் அப்டேட் ஆகிறவர்கள் காலம் தள்ள முடியும். இல்லாவிட்டால் கால ஓட்டத்தில் காணாமல் போவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+