Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛சிஎம்’ பதவியை பறிக்கும் விதானசவுதா படிகள்..பதவியேற்கும் இடத்தை மாற்றிய சித்தராமையா! ‛திடுக்’ வரலாறு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை பெங்களூர் கன்டீரவா ஸ்டேடியத்தில் முதல்வராக பதவியேற்க உள்ளார். கர்நாடகாவில் பெரும்பாலான முதல்வர்கள் பெங்களூர் விதானசவுதா படிக்கட்டுகளில் மேடை அமைத்து பதவியேற்கும் நிலையில் சித்தராமையா மாற்று இடத்தை தேர்வு செய்துள்ளதன் பின்னணியில் உள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் தனித்து ஆட்சியை அமைக்கிறது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

 Why Siddaramaiah choose Kanteerava stadium for his CM oath ceremony instead of Curse Vidhana Soudha Steps?

நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் நாளை மதியம் 12.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர். முன்னதாக நேற்று இரவு பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடகா சட்டசபை காங்கிரஸ் தலைவராக (முதல்வர்) சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

கன்டீரவா ஸ்டேடியம்: அதன்படி நாளை மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் கன்டீரவா ஸ்டேடியத்தில் முதல்வராக சித்தராமையா பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வராக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெங்களூர் விதானசவுதா படிக்கட்டுகளில் மேடை அமைத்து பதவியேற்பார்கள். ஆனால் சித்தராமையா கன்டீரவா மைதானத்தில் பதவியேற்கிறார். இந்நிலையில் தான் இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.

ராசியில்லா முதல்வர் பதவி: அதாவது கர்நாடகாவில் இதுவரை 20க்கும் அதிகமானவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். இதில் பெரும்பலானவர்கள் 5 ஆண்டு பதவியை முழுமையாக முடித்தது இல்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் அந்த மாநிலம் கர்நாடகா என பெயர் மாற்றம் செய்த பிறகு கடந்த 1972 ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை மொத்தம் 17 பேர் முதல்வராக இருந்துள்ளனர்.

2 பேர் மட்டுமே: இதில் 2 பேர் மட்டுமே முதல்வர் பதவியை 5 ஆண்டு நிறைவு செய்துள்ளனர். ஒன்று தேவராஜ் அர்ஸ். மற்றொருவர் சித்தராமையா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர்கள் 2 பேரும் தான் தற்போது வரை முதல்வர் பதவியை 5 ஆண்டு முடித்துள்ளனர் இதில் தேவராஜ் அர்ஸ் 1972 முதல் 1977 வரை முதல்வராக இருந்தார். இவர் ராஜ்பவனில் பதவியேற்றார். அதன்பிறகு 40 ஆண்டுகள் கழித்து சித்தராமையா 2013 முதல் 2018 வரை முதல்வராக தனது முழு 5 ஆண்டிலும் பொறுப்பு வகித்து இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்திலும் சரி, 2018 ம் ஆண்டுக்கு பிறகும் சரி யாரும் முழுமையாக 5 ஆண்டு ஆட்சி முடிக்கவில்லை. இதில் முதல்வர்கள் பதவியை இழந்ததன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

ராசியில்லாத படிகள்: இருப்பினும் பெங்களூர் விதான சவுதா படிக்கட்டுகளில் மேடை அமைத்து பதவியேற்றால் ராசி இருக்காது என்பதும் கர்நாடகாவில் நிலவுகிறது. கர்நாடகாவை பொறுத்தமட்டில் 1983ம் ஆண்டு தான் முதல் முதலாக பொதுவெளியில் முதல்வர் பதவியேற்பு விழா நடத்துவது தொடங்கியது. அதற்கு முன்பு வரை அனைவரும் ராஜ்பவனில் தான் முதல்வராக பதவியேற்றனர்.

 Why Siddaramaiah choose Kanteerava stadium for his CM oath ceremony instead of Curse Vidhana Soudha Steps?

முதல் முதலாக: அதன்பிறகு 1983ல் முதல் முதலாக ஜனதாதளம் கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டே முதல் முதலாக விதானசவுதா படிக்கட்டுகளில் மேடை அமைத்து பதவியேற்றார். கர்நாடகாவில் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வரான இவர் ஊழல், தொலைபேசி ஓட்டுகேட்பு பிரச்சனைகளில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார். 1990ல் காங்கிரஸ் கட்சியின் வீரேந்திர பட்டீல் விதானசவுதா படிக்கட்டில் முதல்வராக பதவியேற்றார். இவர் ஓராண்டில் பதவியை பறிகொடுத்தார்.

பங்காரப்பா: அதன்பிறகு முதல்வராக பதவியேற்ற எஸ் பங்காரப்பாவும் விதானசவுதா படிக்கட்டில் பதவியேற்று 2 ஆண்டில் பதவியை இழந்தார். அதன்பிறகு வீரப்பமொய்லி முதல்வரானார். இவரும் முதலமைச்சராக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையால் வெடித்த போராட்டங்களால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இடத்தை மாற்றிய தேவேகவுடா: இதையடுத்து 1994ல் முதல்வரான ஜேடிஎஸ் எச்டி தேவேகவுடா மற்றும் ஜேஎச் படேல் ஆகியோர் விதானசவுதாவை பதவிபிரமாணத்துக்கு தேர்வு செய்யவில்லை. இந்த வேளையில் தான் தேவேகவுடாவுக்கு பிரதமர் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் விட்டு சென்ற முதல்வர் பதவியை ஜேஎச் படேல் ஏற்றார்.

எஸ்எம் கிருஷ்ணா: அதன்பிறகு 199ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது. எஸ்எம் கிருஷ்ணா முதல்வரானார். இவருக்கு 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் பதவிக்காலம் முடியும் முன்பே ஆட்சியை களைத்து தேர்தலை எதிர்கொண்டார். இதனால் அவரும் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யவில்லை.

தரம்சிங்: அதன்பிறகு 2004 தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தது. காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியில் தரம்சிங் முதல்வரானார். இவரும் விதானசவுதா படிக்கட்டில் பதவியேற்ற நிலையில் 2 ஆண்டை நிறைவு செய்வதற்குள் முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து ஜேடிஎஸ்-பாஜக கூட்டணியில் பாஜகவின் எடியூரப்பா இங்கு பதவியேற்ற நிலையில் 7 நாளில் அவர் பதவியை இழந்தார். அதன்பிறகு 2008 தேர்தலில் பாஜக 110 தொகுதிகளில் வென்று சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. அப்போதும் விதானசவுதா படிக்கட்டில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற நிலையில் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றார். இதனால் அவர் 3 ஆண்டில் பதவியை இழந்தார்.

 Why Siddaramaiah choose Kanteerava stadium for his CM oath ceremony instead of Curse Vidhana Soudha Steps?

குமாரசாமி: இதையடுத்து கடந்த 2018 ல் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியில் குமாரசாமி முதல்வராக விதானசவுதா படிக்கட்டில் பதவியேற்றார். 16 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் இந்த கூட்டணி ஆட்சி ஓராண்டில் கலைந்துபோனது. இதுதவிர பலர் முதல்வராக ராஜ்பவனில் பதவியேற்றாலும் கூட 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய முடியாமல் பதவியை இழந்துள்ளனர். இருப்பினும் கூட விதான சவுதா படிக்கட்டில் பதவியேற்றால் 5 ஆண்டு பதவியை எப்போதும் நிறைவு செய்ய முடியாது என்ற கருத்து கர்நாடகாவில் நிலவி வருகிறது.

சித்தராமையா: இதற்கிடையே தான் கடந்த 2013ல் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக சித்தராமையா, விதான சவுதாவுக்கு பதில் கன்டீரவா மைதானத்தில் விழா நடத்தி பதவியேற்றார். அப்போது அவர் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தார். அதேபோல் தான் இந்த முறையும் சித்தராமையா கன்டீரவா மைதானத்தில் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இருப்பினும் கூட தற்போது முதல்வர் பதவியை டிகே சிவக்குமாரிடம் போட்டியிட்டு தான் சித்தராமையா பெற்றுள்ளார். விரைவில் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த 2013ம் ஆண்டை போல் இந்த முறையும் சித்தராமையா 5 ஆண்டு முதல்வர் பதவியை வெற்றிகரமாக முடிப்பாரா? இல்லாவிட்டால் பாதியில் மேலிடம் கூறுவதை கேட்டு டிகே சிவக்குமாரிடம் ஒப்படைத்துவிட்டு செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விடை அறிய வேண்டும் என்றால் நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+