சசிகலா தீவிர அரசியலுக்கு வருவாரா?.. விரைவில் அதிகாரப்பூர்வ வீடியோ ரிலீஸாமே?
சென்னை: சசிகலா விரைவில் வீடியோவில் தோன்ற வாய்ப்பிருப்பதாகவும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அது போல் அவரது செயல்களும் பேச்சுகளும் இருந்தன.
இந்த நிலையில் அவர் தேர்தலுக்கு முன்பே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். "நான் அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்" என குறிப்பிட்டிருந்தார். இதனால் அதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அரசியல்
ஆனால் சசிகலா தற்போது பதுங்கி சமயம் பார்த்து முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என அரசியல் நோக்காளர்கள் தெரிவித்திருந்தனர். அதன் படி தற்போது கடந்த இரு தினங்களாக சசிகலா பேசியதாக இரு ஆடியோக்கள் வெளியாகின. அதில் யாரோ கட்சித் தொண்டரிடம் கவலைப்படாதீர்கள், நான் விரைவில் வருகிறேன்.

சண்டை
கட்சியை சரி செய்துவிடலாம். அவர்கள் சண்டையிடுவதை பார்த்தால் வேதனையாக இருக்கிறது, கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்
என தெரிவித்திருந்தார். இந்த இரு ஆடியோக்களும் அதிமுகவில் அதிர்வலையை ஏற்படுத்தின.

சசிகலா கபளீகரம்
எப்போது வேண்டுமானாலும் அதிமுகவை சசிகலா கபளீகரம் செய்ய வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலா இனி தீவிர அரசியலில் இறங்குவார் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமான வீடியோ விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

ஆடியோ
மேலும் சசிகலாவின் பேசியதாக வெளியான ஆடியோவில் இருந்தது அவரது குரல்தானா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அது அவரது குரல்தான் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே இனி சசிகலா முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்றே அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications