பூமிக்கு நாளை முதல் புது "மினி நிலா.." எப்படி பார்க்கலாம்? எத்தனை நாள் வரை தெரியும்?
பெங்களூர்: நாளை முதல் வரும் நவம்பர் 25 ஆம் தேதி வரை வானில் மினி நிலா என்ற விண்கல் தெரியும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒரு நிலாவை நாம் வானில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு நிலவை நாளையில் இருந்து நாம் பார்க்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நாம் வாழும் பூமியானது பல்வேறு அதிசயங்களையும் கேள்வியை உள்ளடக்கியுள்ளது. கற்பனைக்கு எட்ட முடியாத பல அதிசயங்கள் நிறைந்துள்ளது. பூமி, சூரியன், பால்வளி அண்டம், கேலக்சி என நம் கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் நிறைந்துள்ளன. பூமியில் எப்படி உயிரினங்கள் உருவானது என்றும், பூமியை போல் உள்ள மற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

2 நிலவுகள்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது, நிலவு, சூரியன் குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன். இஸ்ரோவும் இதுபோன்ற ஆய்வுகளை செய்து வருகிறது. சூரியனைச் சுற்றி வருவது கோள்கள் என்றும், இந்த கோள்களை சுற்றி வருவது துணைக்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அதன்படி தான் பூமியின் துணைக்கோளுக்கு நிலவு என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் உள்ளது என்று இதுவரையிலான அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன.
ஆனால் தற்போது பூமிக்கு அருகே ஒரு விண்கல் வருவதாகவும், இந்த விண்கல்லை மினி நிலவு என்று அழைக்கலாம் எனவும் அறிவியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதாவது நிலாவை போன்றே ஒளி வீசும் தன்மையுள்ள விண்கல்லானது பூமிக்கு அருகே வர இருப்பதனால் இதனை மினி நிலா என்று சொல்கின்றனர். இந்த விண்கல் மீது சூரிய ஒளி விழுந்து அது பூமியை நோக்கி திரும்பும்போது நமக்கு வானில் இன்னொரு நிலா இருப்பது போல் தெரியும்.
இதனால் நாளையில் இருந்து பூமிக்கு 2 நிலவுகள் தெரியும் அதிசய நிகழ்வு நடக்க இருக்கிறது. இந்த விண்கல் நாளை(மினி நிலா) பூமிக்கு அருகில் வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2024 ஈடி 5 ஐ என அழைக்கப்படுகின்ற இந்த மினி நிலா பூமிக்கு அருகே சுமார் 14 லட்சம் கி.மீ தூரத்தில் வர இருக்கிறது.
வெறும் கண்ணால் பார்க்க முடியுமா?: ஏற்கனவே ஒரு நிலாவை நாம் தினமும் பார்க்க இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக ஒரு நிலாவை பார்க்கலாம் என்று அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த நிலா அளவில் மிகவும் சிரியது என்பதால் தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். வெறும் கண்களால் பார்க்க முடியாது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பைனாகுலர்ஸ் அல்லது ஹோம் டெலஸ்கோப்கள் வைத்து இந்த மினி நிலவை பார்க்கலாம்..
எத்தனை நாட்கள் பார்க்க முடியும்?: இந்த மினி நிலவு நம் நிலாவை விட 1,73,700 மடங்கு அளவில் சிறியது ஆகும். மினி நிலவானது நாளை முதல் வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி வரை பார்க்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கால நேரத்தில் நம்மால் இந்த நிகழ்வை பார்க்க முடியாவிட்டாலும் கவலை இல்லை. இதே சிறுகோள் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு வரும் 2055 ஆம் ஆண்டிலும் வரும். அப்போதும் பார்த்து கொள்ளலாம்.
துணைக்கோள்கள் எப்படி உருவானது?: சூரியக்குடும்பத்தில் உள்ள 8 கோள்களில் வியாழன் கோளில் தான் அதிக துணைக்கோள்கள் உள்ளன. மொத்தம் 63 பெயரிடப்பட்ட துணைக்கோள்கள் உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் 79 துணைக்கோள்கள் வியாழன் கோளை சுற்றி வருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். பூமிக்கு அருகில் உள்ள புதன் மற்றும் வெள்ளிக் கோள்களில் துணைக்கோள்கள் கிடையாது.
இந்த துணைக்கோளானது ஒரு கோளின் ஈர்ப்பு விசையினால் உருவாகின்ற இயற்கையான பொருளாகும். அதாவது ஒரு கோள் தோன்றும் போதே அதன் துணைக்கோளும் உருவாகியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது அல்லது ஒரு கோள் உருவாகின்ற துவக்க காலத்தின் போது அதனை சுற்றியுள்ள பொருட்கள், கற்கள் கோள்களின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பின்னர் அந்த பொருட்கள் ஒருங்கிணைந்து ஒரு துணைக்கோளாக உருவாகியிருக்கும்.
நிலா உருவானது எப்படி?: உதாரணத்திற்கு பெரிய அளவிலான விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதும்போதோ அல்லது விண்கற்கள் கோள்கள் மீது மோதி அதில் இருந்து பிரியும் பாறைகள், துகள்கள் ஒன்றிணைந்து கூட துணைக்கோளாக மாறியிருக்ககூடும் என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பூமியின் துணைக்கோளான நிலா கடந்த 450 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.
450 ஆண்டுக்ளுக்கு முன்பு பூமி மீது, பூமிக்கு சமமான தியா எனப்படும் விண்கல் அதிவேகத்தில் மோதியது என்றும், அப்போது பூமியில் இருந்து பெரிய அளவில் பாறைகள் வெடித்து விண்வெளியில் சிதறியதாகவும், இந்த சிதறல் பாகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பெரிய பாறைக்கோளமாக மாறியிருக்கிறது. தன்னத்தை தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றுவதானால் நாளடைவில் கோளமாக மாறியிருக்கிறது. இப்படித்தான் நிலாவானது உருவாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications