பலமுறை உல்லாசம்.. 10 ஆண்டு காதல் கசந்தது.. வேறொருவரை கரம்பிடிக்க முயன்ற காதலன்.. காதலி செய்த சம்பவம்
பெங்களூர்: கர்நாடகாவில் 10 ஆண்டுகளாக காதலித்து பல முறை உல்லாசமாக இருந்த காதலன், தனது காதலியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்றுள்ளார். இதுபற்றி அறிந்த காதலியை காதலன் குடும்பத்தினர் அவமானப்படுத்தி அனுப்பிய நிலையில் இந்த சம்பவம் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
இப்போது காதல் என்ற பெயரில் துரோகம் செய்வது இளம் தலைமுறையினர் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு ஆண்களும், பெண்களும் விதிவிலக்கல்ல.

சில சமயங்களில் குடும்ப சூழல் காதலை பிரித்து விடலாம். அதேவேளையில் சிலர் தனது காதலன், காதலியை ஏமாற்றிவிட்டு வேறு நபருடன் திருமணம் செய்து கொள்வதும் ஆங்காங்கே நடந்து கொண்டே தான் இருக்கிறது.
10 ஆண்டு காதல்
இந்நிலையில் தான் 10 ஆண்டுகளாக காதலித்து பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு தன்னை ஏமாற்றி இன்னொரு பெண்ணை திருமணம் செய்வதாக காதலன் மீது காதலி ஒருவர் பரபரப்பான புகாரை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசூகூரில் நடந்துள்ளது. லிங்கசூகூர் டவுனை சேர்ந்தவர் சிவு என்ற சிவக்குமார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
பலமுறை உல்லாசம்
இருவரும் வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி வெளியே சென்று சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிவக்குமார், அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதற்கிடையே தான் அந்த பெண்ணின் வீட்டில் மாப்பிள்ளை தேட தொடங்கினர். இதனால் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிவக்குமாரிடம் கூறினார். ஆனால் சிவக்குமார் ஏதாவது ஒரு காரணத்தை கூறி திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளார்.
வேறோருவருடன் திருமண முயற்சி
இதற்கிடையே தான் கடந்த சில வாரங்களாக சிவக்குமார், அந்த பெண்ணிடம் சரியாக பேசவில்லை. இது அந்த பெண்ணுக்கு சந்தேகத்தை எழுப்பியது. இதுபற்றி விசாரித்தபோது தான் சிவக்குமார் தன்னை கழற்றிவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய தயாராவது தெரியவந்தது.
இதனால் காதலியான அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் சிவக்குமார் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டல் விடுத்து அனுப்பி உள்ளனர்.
போலீசில் புகார்
இதனால் வேறு வழியின்றி அந்த பெண், லிங்கசூகூர் போலீசில் சிவக்குமார் மீது புகார் அளித்துள்ளார். அதில், ''சிவக்குமார் தன்னை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இப்போது என்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவருடன் திருமணம் செய்ய முயற்சிக்கிறார். நியாயம் பெற்று தர வேண்டும்'' என்று கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications