இங்க பாரு தினேஷ்.. மூக்கு பெருசா, தடிமனா இருக்கு.. சரிப்பட்டு வராது.. கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்!

கல்யாணத்தை மணப்பெண் தடுத்து நிறுத்தி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: மாப்பிள்ளைக்கு ஏன் அந்த உறுப்பு இவ்ளோ பெரிசா இருக்கு என்று சொல்லி கல்யாணத்தையே நிறுத்திவிட்டார் இளம்பெண்! இந்த வினோத சம்பவம் பெங்களூருரில் நடந்துள்ளது.

பெங்களூருவில் கோரமங்களாவில் வசித்து வருபவர் தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.. 35 வயதாகிறது.. இவர் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர்.

இவருக்கு மேட்ரிமோனியல் மூலம் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் நிச்சயமானது.. பெங்களூரு எச்எஸ்ஆர்லே-அவுட்டில் தீபா வசித்து வருகிறார். இவரும் கம்ப்யூட்ர் என்ஜினியர்தான்.. அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.

தினேஷ்

தினேஷ்

போன ஆகஸ்டு 13-ந் தேதி எம்ஜிரோட்டில் உள்ள ஓட்டலில் தீபாவையும் அவரது சகோதரி லட்சுமியையும் தினேஷ் சந்தித்து பேசினார்... இதற்கு பிறகு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற 30-ந் தேதி கல்யாண தேதி குறிக்கப்பட்டது.

உறவினர்கள்

உறவினர்கள்

கல்யாணத்தை திருப்பதி கோவிலில் வைத்து கொள்ளலாம் என்று தீபா தினேஷின் தந்தையிடம் சொன்னர்.. ஆனால் பெங்களூருவில் தங்களுக்கு உறவினர்கள் அதிகம் என்பதால், இங்கேயே வைத்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.. இதற்கு தீபா ஒத்துக்கொள்ளவில்லை.

2 லட்சம் ரூபாய்

2 லட்சம் ரூபாய்

வேறு வழியில்லாமல், திருப்பதியில் கல்யாணத்துக்கு தினேஷ் அப்பா ஓகே சொன்னார்.. அங்கு கல்யாணத்துக்கு வந்து தங்கும் சொந்தக்காரர்களுக்காக 70 ரூம்கள் புக் செய்யப்பட்டன.. அதற்கு 2 லட்சம் ரூபாய் அட்வான்சும் தந்தனர்.. சாப்பாட்டுக்கும் பணம் தரப்பட்டு அந்த வேலைகளும் ஆரம்பமாயின. கல்யாணத்துக்கு தேவையான டிரஸ்கள், பொருக்ள 4 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்டன.

நிறுத்து.. தினேஷ்

நிறுத்து.. தினேஷ்

இந்நிலையில் திடீரென தீபா அமெரிக்கா கிளம்பி சென்றார்.. இதை பற்றி தினேஷ் வீட்டில் கேட்டதற்கு சரியாக பதிலும் சொல்லவில்லை..தினேஷ் போனில் தீபாவிடம் கேட்டதற்கு, "எனக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லை.. உன் மூக்கு பெரிசா இருக்கு.. தடிமனா இருக்கு.. கல்யாணத்தை நிறுத்திடு" என்று சொன்னார்.. இதைக் கேட்டு அதிர்ந்த தினேஷ்.. "சரி.. நான் சீக்கிரமாவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கறேன்" என்றார்.

சமாதானம்

சமாதானம்

ஆனால் தீபா கேட்கவே இல்லை.. எவ்வளவோ தினேஷ் முயற்சித்தும் தீபா கல்யாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தார். பலமுறை தினேஷ் போன் செய்து சமாதானம் செய்ததால், அவரது செல்போன் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார் தீபா.. இதனால் மனம் உடைந்த தினேஷ் கோர்ட் வாசலை ஏறும்படி ஆயிற்று.

விசாரணை

விசாரணை

"என்னை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்ததாக தீபா, அவரது சகோதரி லட்சுமி, தந்தை மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.. இதுபோல மேலும் சிலரைகூட இந்த கும்பல் ஏமாற்றியிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது.. தீபா, லட்சுமி, அவர்களின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோரமங்களா போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி கோரமங்களா போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+