திடீரென வந்த தடை.. எகிறும் வெள்ளி விலை! அப்போ தங்கம்? ஆனந்த் சீனிவாசன் சொல்லும் 'ஷாக்' காரணங்கள்!
சென்னை: தங்கம் விலை எங்கோ உச்சத்தில் இருக்கும் நிலையில், இப்போது பொதுமக்களின் பார்வை வெள்ளி பக்கம் திரும்பியிருக்கிறது. வெள்ளியில் இன்று முதலீடு செய்தால் எதிர்காலத்தில் பல மடங்கு லாபம் வரலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், தங்கத்தை வெள்ளி போலக் கருத முடியாது என்கிறார் ஆனந்த் சீனிவாசன்..! இதற்கான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.
உலகின் மிகப் பெரிய வல்லரசுகளில் ஒன்றான சீனா சில வாரங்களுக்கு முன்பு அதிரடியாக சில முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது சல்பியூரிக் ஆசிட் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா உட்படப் பல நாடுகள் சீனாவிடம் இருந்து தான் சல்பியூரிக் ஆசிட்டை வாங்குகிறது. அதை மைன் செய்யும்போதே அதில் இருந்து வெள்ளி கிடைக்கிறது.

சீனா எடுத்த முடிவு
இந்தச் சூழலில் திடீரென சீனா சல்பியூரிக் ஆசிட்டிற்கு தடை விதித்திருக்கும் சூழலில், இதனால் வெள்ளி விலை மிகப் பெரியளவு உயரலாம் எனத் தகவல்கள் வெளியானது. இந்த தடையை விதித்த அதேநேரம் சீனா அதிகளவு வெள்ளியைச் சந்தையில் விற்று வருகிறது. இதனால் வெள்ளியின் எதிர்காலம் என்னவாக இருக்கும்.. விலை ஏறுமா எனப் பல கேள்விகள் இருந்தது. இருப்பினும், இதைத் தாண்டி வெள்ளியில் அடிப்படை சிக்கல் இருப்பதாக எச்சரிக்கிறார் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்!
ஆனந்த் சீனிவாசன்
இது குறித்து ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "நீ தலைகீழாக நின்னா போதும், மானிட்டரி மெட்டல் வேற, இண்டஸ்ட்ரியல் மெட்டல் வேற. அமெரிக்காவில் வெள்ளியை மானிட்டரி மெட்டல் ஆக்க ஒரு மசோதாவை கொண்டு வந்துள்ளது உண்மை தான். ஆனால், அது அறிமுக நிலையில் தான் இருக்கிறது. இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்கிறது. அதில் டிரம்ப் தோற்றுவிடுவார். நாடாளுமன்றம் அவர் கையில் இல்லை என்றால் புதிய சில்வர் மசோதா நிறைவேறாது.
வெள்ளி
சில்வர் தான் வெள்ளி என்று சொல்கிறார்களோ அப்போது தான் வெள்ளியைப் பார்க்கக் கூட முடியும். அதற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் சட்டத்தை மாற்ற வேண்டும். வெள்ளியை ஒரு இடத்தில் சேமிக்க மாட்டார்களாம். 4 இடங்களில் பிரித்துச் சேமித்து வைப்பார்களாம். இதற்குப் பெயர் சில்வரை கரன்சி ஆக்குவது இல்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில வங்கிகள் வெள்ளியை வாங்கி கடன் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக இணையத்தில் யாரோ கிளப்பிவிட்டார்கள். ஆனால், அது உண்மை இல்லை. அதுபோலத் தான் இதுவும்! எனவே, இண்டஸ்ட்ரியல் மெட்டல், இண்டஸ்ட்ரியல் மெட்டல் தான்.!
சில்வர் வந்து ஒரு இண்டஸ்ட்ரியல் மெட்டல். 120 ஆண்டுகளுக்கு முன்னாடி அது ஒரு மானிட்டரி மெட்டலா இருந்தது. இப்போதைக்கு அது மானிட்டரி மெட்டலா ஆகாது. இன்று வெள்ளி விலை ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் ₹2,37,000ஆக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அது 4 லட்சம் ரூபாயாக இருந்ததை நாம் மறக்க வேண்டாம்.
கவனம்
நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது வெள்ளி மட்டும் ஏறவில்லை. எல்லா மெடலும் தான் இப்போது ஏறி இருக்கிறது. ஸ்டீல் கூட ஏறி இருக்கிறது. தங்கம், வெள்ளி அளவுக்கு ஸ்டீல் விலை ஏறவில்லை என்றாலும் கூட கணிசமாக உயர்ந்தே இருக்கிறது. இதனால் தான் ஸ்டீல் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் நல்ல லாபம் பார்த்துள்ளனர். அலுமினியம் ஏறி இருக்கிறது.. ஸ்டீல் ஏறி இருக்கிறது. எல்லா மெட்டலும் ஏறி இருக்கு.. வெள்ளியும் ஏறி இருக்கிறது. இதையும் தாண்டி வெள்ளியில் முதலீடு செய்தே தீருவேன் என நீங்கள் அடம் பிடித்தால் அது உங்கள் இஷ்டம்.. போடுங்கள் நஷ்டமாகுங்கள்.. எனக்கு என்ன வந்தது" என்றார்.
அதாவது வெள்ளி இப்போது என்ன தான் ஏறினாலும் அதை முதலீடாகக் கருத முடியாது.. வெள்ளி வெள்ளி தான்.. தங்கம் தங்கம் தான் என்பதே அவரது கருத்தாகும்.














Click it and Unblock the Notifications