Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிட்காயின் தான் அடுத்த தங்கமா? இப்போது முதலீடு செய்யலாமா! நாலே வார்த்தையில் ஆனந்த் சீனிவாசன் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போது ஒரு சிலர் பிட்காயின் தான் அடுத்த தங்கம் என்று சொல்லி முதலீடு செய்து வருகிறார்கள். வரும் காலத்தில் இந்த பிட்காயினில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அவர்கள் இதைச் செய்து வருகிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை.. பிட்காயினில் எப்போது முதலீடு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

நமது நாட்டில் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதமே ஒரு கிராம் தங்கம் ரூ.7000ஐ நெருங்கியது. அப்போது மத்திய அரசு தனது இறக்குமதி வரியைக் குறைப்பதாக பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டது.

anand srinivasan personal finance business

தங்கம் விலை: இதையடுத்து தங்கம் விலை அப்போது சில நாட்களில் பல நூறு ரூபாய் குறைந்தது. ஆனால், அதன் பிறகு தங்கம் விலை மளமளவென அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 7,095க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டை பொறுத்தவரை ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஒரே சேமிப்பாகத் தங்கமே இருந்து வருகிறது. தங்கம் விலை இந்தளவுக்கு உயர்வதால் மக்கள் அதை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

அதேநேரம் இன்னும் சிலர், குறிப்பாக இளைஞர்கள், பிட்காயின் தான் அடுத்த தங்கம் என்று சொல்லி முதலீடு செய்து வருகிறார்கள். சிலர் தங்கள் சேமிப்பின் பெரும்பகுதியைக் கூட இந்த பிட்காயினிலேயே முதலீடு செய்துள்ளனர். ஆனால், பிட்காயின் உண்மையாகவே தங்கம் அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்குமா என்பது குறித்து பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது சமீபத்திய வீடியோவில், "தங்கம் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் பதற்றம் தொடர்வதால் தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை. நான் இன்னொரு விஷயத்தையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதாவது தங்கம் நார்மல் மார்க்கெட் சூழலில் இருந்து இருந்தால் தங்கம் விலை சற்று குறைவாகவே இருந்து இருக்க வேண்டும்.

அதாவது இதற்கு முன்பு அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்த போது, தங்கம் விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால், உலக நாடுகள் உள்ளே புகுந்து வாங்கியதாலேயே தங்கம் விலை அதிகரித்துவிட்டது.

பிட்காயின்: மேலும், இங்கே நிறையப் பேர் பிட்காயின் தான் புதிய தங்கம் எனச் சொல்கிறார்கள். பணவீக்கத்தில் இருந்து எப்படி நமது சேமிப்பைத் தங்கம் பாதுகாக்குமோ, அதுபோல பிட்காயினும் பாதுகாக்கும் என நம்புகிறார்கள். அப்படிப் பார்த்தால் உலகமே போர் சூழலில் இருக்கிறது. இந்த சூழலில் தங்கம் விலையைப் போல பிட்காயின் விலையும் அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால், அதன் விலை பெரியளவில் அதிகரிக்கவில்லை.

இதுபோன்ற பதற்றமான நேரங்களில் எப்படி தங்கம் விலை உச்சம் தொடுகிறதோ.. அதேபோல பிட்காயின் விலையும் அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால், அது ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கிறது. தங்கத்தைப் போன்ற பாதுகாப்பான முதலீடாக பிட்காயின் இருந்து இருந்தால் அது ஏறி இருக்கும். ஆனால், இப்போது அது ஏறவில்லை" என்றார்.

தள்ளியே இருங்க: அதாவது பிட்காயினை எல்லாம் நிச்சயம் தங்கமாகப் பார்க்க முடியாது.. அதில் இருந்து தள்ளியே இருங்கள் என்பதே அவரது கருத்தாகும். அமெரிக்க டாலர் மதிப்பில் நேற்றைய தினம் ஒரு பிட்காயின் 62,800 டாலர் என்ற ரேஞ்சில் வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. பிட்காயின் கடந்த காலங்களில் அதிகபட்சமாக 73,750 டாலர் வரை சென்றுள்ளது. ஆனால், இப்போது சர்வதேச பதற்றம் நிலவினாலும், சுமார் 11,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.9.25 லட்சம்) குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் யாரும் ஒரு பொருளாதார ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நிதி அல்லது முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெறவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+