பெட்ரோல் விலை ரூ.1 குறையலாம்: மக்களுக்கு எண்ணெய் நிறுவனங்களின் 'தீபாவளி பரிசு'
மும்பை: இந்த மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் தீபாவளி பண்டிகைக்கு முன்பு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.1 குறைக்கக்கூடும்.
அக்டோபர் 1ம் தேதி சர்வதசே சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு ரூ.6,739 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பேரலின் விலை ரூ. 6,513 ஆக குறைந்தது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 61.44 ஆக நேற்று இருந்தது. கடந்த முறை பெட்ரோல் விலை மாற்றப்பட்டபோது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.62.5 ஆக இருந்தது.

தற்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் தீபாவளிக்கு முன்பாக பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.1 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இது குறித்து முன்னணி எண்ணெய் விற்பனை நிறுவனத்தின் நிதி தலைவர் கூறுகையில்,
எங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் லாபம் கிடைக்கிறது. இந்த மாத இறுதியில் பெட்ரோல் விலையை குறைக்கலாம் என்று இருக்கிறோம் என்றார்.
சர்வதேச அளவில் விலை குறைந்துள்ளது. அதனால் பெட்ரோல் விலை குறைக்கப்படலாம். இந்த வார இறுதியில் இது குறித்து இறுதி முடிவு எடுப்போம் என்று மற்றொரு எண்ணெய் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர் தெரிவித்தார்.
கடந்த 1ம் தேதி பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. கடந்த மே மாதம் 1ம் தேதியில் இருந்து அக்டோபர் 1ம் தேதி வரை பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தான் பெட்ரோலின் விலை அதிகபட்சமாக ரூ.3 குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications