2வது நாளாக டெல்லியில் பூகம்பம்.. ஹரியானாவில் 3.7 ரிக்டரில் பதிவான திடீர் நிலநடுக்கம்.. மக்கள் பீதி
சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மற்றும் டெல்லியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்று 2வது நாளாக டெல்லி மற்றும் ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு 7.49 மணிக்கு ஜஜ்ஜாரில் நிலநடுக்கம் உணரப்பட்டால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார், டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதியில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றைய தினம் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று 2வது நாளாக ஜஜ்ஜார் மற்றும் டெல்லியில நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு 7.49 மணிக்கு ஜஜ்ஜார் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லியிலும் பொதுமக்கள் நிலநடுக்கத்ததை உணர்ந்துள்ளனர்.
இதனை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் சார்பில், ‛‛ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியில் இன்று இரவு 7 மணி 49 நிமிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 என பதிவாகி உள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டு இருந்தது''என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஜ்ஜாரில் நேற்று, இன்று என 2 நாட்கள் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் இந்த தொடர் நிலநடுக்கத்தால் ஜஜ்ஜார், டெல்லி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக ஜஜ்ஜாரை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‛‛நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கிறோம். நேற்றைய தினத்தைபோல் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலஅதிர்வை நாங்கள் உணர்ந்தோம். எங்களை கடவுள் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்'' என்றார்.
முன்னதாக நேற்றைய தினம் டெல்லி, ஜஜ்ஜாரில நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று காலையில் 9.04 மணிக்கு டெல்லி, ஜஜ்ஜாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் ஹரியானாவின் குர்கிராம், என்சிஆரின் பரிடாபாத், ஹிசார், ரோடாக், சோனிபேட், டெல்லியின் அருகே உள்ள உத்தர பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது.
டெல்லி, ஹரியானாவில் இதுபோன்ற நிலநடுக்கம் ஏற்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை நடந்துள்ளது. நிலநடுக்கம் பாதிப்புள்ள பகுதிகள் என்று நம் நாட்டின் பல்வேறு இடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் டெல்லி மண்டலம் IV பிரிவில் உள்ளது. இந்த பிரிவு என்பது நிலநடுக்கம் பாதிப்பு கொண்ட பகுதியாகும். இதன்மூலம் அடிக்கடி 5 முதல் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.
டெல்லி, ஹரியானா ஆகியவை பக்கத்தில் பக்கத்தில் இருப்பதால் இருஇடங்களிலும் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் உணரப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications