இதுதானே இந்தியா.. ஸ்கூட்டியில் புல்லாங்குழலுடன் யார் தெரியுதா? முஸ்லிம் தம்பதிக்கு குவியும் பாராட்டு
சண்டிகர்: இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப்பார்த்த பலரும், இந்த இஸ்லாமிய தம்பதியினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோவை ஏராளமானோர் ஷேர் செய்தும் வருகின்றனர்.
இந்தியா முழுவதும் கிருஷ்ணர் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் பக்தர்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்தவகையில், 2 தினங்களுக்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தியை தமிழக மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணனுக்கு பிடித்த முறுக்கு, சீடை, வெண்ணெய், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவற்றை வைத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பிறகு நூற்றுக்கணக்கான குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து கொண்டு கோவிலுக்கு வருகை தந்தனர்.. குழந்தைகள் கோலாட்டமும் ஆடினார்கள்..
பள்ளிக்குழந்தைகள்: ஆங்காங்கே நடந்த நிகழ்வுகளில் கிருஷ்ண பெருமானின் கதைகள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறப்பட்டன. அதேபோல, பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் பங்கேற்ற பல கலாச்சார நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டன.. இதில் கிருஷ்ணப் பெருமானின் புகழ் பாடும் பாடல்களுக்கு பள்ளிக்குழந்தைகள் சிறப்பான நடனங்களை ஆடினர்.
தங்கள் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிவதால், இதற்காகவே பெற்றோர்கள் நிறைய மெனக்கெட்டார்கள்.. முன்கூட்டியே, பிள்ளைகளுக்கான உடைகளையும், அணிகலன்களையும் தயார் செய்தனர். கிருஷ்ணர், ராதை மேக்கப்புகளுக்காக நிறைய நேரம் ஒதுக்கி, தங்கள் குழந்தைகளை அழகுபடுத்தினார்கள்.. தங்களது குழந்தைகள் மேடையேறி பாடுவதையும், ஆடுவதையும், பெற்றோர்கள் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
செங்கல்பட்டு: இந்நிலையில், ஒரு சம்பவத்தை நினைவுகூர வேண்டியிருக்கிறது.. கடந்த வரும் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.. இங்கு வசித்து வரும் இதயதுல்லா- தாஹிதா பேகம் இஸ்லாமிய தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், அதில் 5 வயது நிரம்பிய இரண்டாவது குழந்தை ஹேனா, டிவியில் சுட்டி கிருஷ்ணரை பற்றிய நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, தன்னுடைய பெற்றோரிடம் கிருஷ்ணர் வேடமிடுமாறு ஆசையாய் கேட்டுள்ளார்.
உடனே மகளின் ஆசையை இஸ்லாமிய தம்பதியினர் நிறைவேற்றியிருக்கிறார்கள்.. இதற்காகவே தாம்பரம் மார்க்கெட்டுக்கு சென்று கிருஷ்ணர் வேடமிட தேவையான மயில் இறகு, புல்லாங்குழல், சிறிய பானை, ஆடை, என அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து, அலங்கார பொருட்களை வைத்து, மகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு தெருவில் நடக்க விட்டு மகிழ்ந்தார்கள்..
பஞ்சாப் வீடியோ: தமிழ்நாட்டில் கடந்த வருடம் இந்த சம்பவம் அனைவராலும் ஈர்க்கப்பட்டது. ஆனால், இப்போது பஞ்சாப் மாநிலத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது..
லூதியானா பகுதியில் முஸ்லீம் தம்பதி ஒருவர் தங்களுடைய மகனுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்துள்ளனர்.. அத்துடன், தங்கள் கிருஷ்ணர் வேடத்திலேயே தங்கள் மகனை ஸ்கூட்டியில் வைத்து அழைத்து சென்றுள்ளனர்.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஏகப்பட்ட லைக்ஸ்கள், ஷேர்களுடன் இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் இந்திய கலாச்சாரத்தை எடுத்துரைப்பது போல் இருப்பதாக இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
பாராட்டுக்கள்: மனிதர்கள் மதங்களை தூக்கி பிடித்து கொண்டிருந்தாலும், குழந்தையின் ஆசையை நிறைவேற்ற, மதங்களை கடந்து ஒதுக்கி வைத்து விட்டு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடிவரும், இதுபோன்ற முஸ்லிம் பெற்றோர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து கொண்டிருக்கின்றனகொண்டாடிய சம்பவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications