பிடிஆர் சொல்றத விடுங்க.. “இலவச திட்டம்” அறிவித்த அரியானா பாஜக அரசு! இயற்கை விவசாயத்துக்கு திட்டம்
சண்டிகர்: அரியானாவில் விவசாயிகள் நாட்டு மாடுகளை வாங்குவதற்கு ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்து உள்ளார்.
அரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் , நாட்டு மாடுகள் இனத்தை காக்கும் வகையிலும் முக்கிய திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.
அதாவது, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நாட்டு மாடுகள் வாங்குவதற்காக தலா ரூ.25,000 வழங்கப்படும் என்று அவர் அறிவித்து இருக்கிறார். "கிட்டத்தட்ட 2,800 விவசாயிகள் நாட்டுப் பசு வாங்கும் திட்டத்துக்காக முன்பதிவு செய்து இருக்கின்றனர்." என்றார்.

கிஷான் கிரெடிட் கார்டு
பசு கிஷான் கிரெடிட் கார்ட் என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ள அரியானா அரசு இதுவரை அதில் 42,000 கிரெடிட் கார்டுகளை வழங்கி இருக்கிறது. "ரசாயண உரங்களால் விவசாய நிலங்கள் விஷமாகிவிட்டன. இயற்கை விவசாயமே இதற்கான ஒரே வழி. இந்த திட்டத்தின் நோக்கம் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதுதான்.

பிரதமர் மோடி
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது என்றும், இலவச திட்டங்களை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் இதனை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் திமுகவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

தலைமை நீதிபதி
இந்த வழக்கை சில நாட்களுக்கு முன் விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமை. இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான கேள்வியும் உள்ளது." என்றார்.

பிடிஆர் விளக்கம்
பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "நீங்கள் பொருளாதாரத்தில் பி.எச்.டி முடித்துள்ளீர்களா? அல்லது நோபல் பரிசைதான் வைத்திருக்கிறீர்களா? எங்களை விட சிறந்தவர்கள் என்று சொல்ல உங்களிடம் ஏதாவது இருக்கா? தமிழ்நாட்டில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்ததே பிரதமர் மோடிதானே.." என்று குறிப்பிட்டு விமர்சித்தார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications