Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MLA ஆகும் சாவித்திரி! ஹரியானாவில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி.. பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாம்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானாவில் இப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் இந்தியாவின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டால் சுயேச்சையாகக் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் அவர் சுமார் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. அங்கு உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

haryana assembly election results 2024 haryana assembly election 2024 haryana election 2024

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஆனால், அதன் பிறகு டிரெண்ட் மொத்தமாக மாறியது. இப்போது பாஜகவே ஆட்சியை அமைக்கிறது.

இந்தியாவின் பணக்கார பெண்: ஹரியானாவில் உள்ள ஹிசார் தொகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண் தொழிலதிபரான சாவித்ரி ஜிண்டால் போட்டியிட்டார். சுயேச்சை களமிறங்கிய சாவித்ரி ஜிண்டால், முதலில் ஹிசார் தொகுதியில் சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

இன்று காலை 11 மணி நிலவரப்படி, சாவித்திரி ஜிண்டால் அங்குப் போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களைக் காட்டிலும் 3,836 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். முதல் சுற்று முடிவில் சாவித்திர ஜிண்டால் 5,525 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் ராரா 1,689 வாக்குகளைப் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் கமல் குப்தா வெறும் 1352 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு இருந்தார்.

வாக்கு எண்ணிக்கை செல்ல செல்ல சாவித்திரி ஜிண்டாலுக்கும் மற்ற வேட்பாளர்களுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இறுதியில் ஜிண்டால் காங்கிரஸ் வேட்பாளரை விட 18,941 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற நிலையில், பாஜக 3ம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

சாவித்ரி தேவி ஜிண்டால்: நாட்டின் மிக முக்கியமான தொழில் நிறுவனங்களில் ஒன்றான ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவர் தான் சாவித்ரி தேவி ஜிண்டால்.. மறைந்த பிரபல தொழிலதிபர் ஓ பி ஜிண்டாலின் மனைவி சாவித்திரி இந்தியாவின் பணக்கார பெண்ணாக அறியப்படுகிறார். அவரது நிகர மதிப்பு 29.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவரது மகன் நவீன் ஜிண்டால் இப்போது குருஷேத்ரா தொகுதியில் பாஜக சார்பில் எம்பியாக இருக்கிறார்.

சுயேச்சையாகப் போட்டியிட்டது ஏன்: சாவித்திரி ஜிண்டால் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.. இருப்பினும், கடந்தாண்டு மார்ச் மாதம், சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது மகன் நவீன் ஜிண்டால் ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.. அவர் பாஜக சார்பில் ஹிசார் தொகுதியில் போட்டியிட்ட சீட் கேட்டார். இருப்பினும், அவருக்கு பாஜக வாய்ப்பு தரவில்லை. கமல் குப்தா அங்குப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் பாஜகவில் இருந்தும் விலகிய சாவித்ரி ஜிண்டால் ஹிசார் தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்கினார். இப்போது அவர் தேர்தலில் வென்றும் காட்டியிருக்கிறார்.

அமைச்சர் பதவி: சாவித்ரி ஜிண்டால் ஹிசார் தொகுதியில் ஏற்கனவே இரு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கடந்த 2005இல் காங்கிரஸ் சார்பில் ஹிசார் தொகுதியில் வென்றார். 2009இல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு 2013ல் பூபிந்தர் சிங் ஹூடா அரசில் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இருப்பினும் 2014இல் அதே ஹிசார் தொகுதியில் அவரை பாஜகவின் கமல் குப்தா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+