பலாத்கார வழக்கில் கைது.. போலீசை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய ஆம்ஆத்மி எம்எல்ஏ! பரபரப்பு சம்பவம்
சண்டிகர்: பஞ்சாப்பில் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம்ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மஜ்ரா என்பவர் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு போலீஸ் வாகனத்தை எடுத்து கொண்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப்பை அதிர வைத்துள்ள இந்த சம்பவம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் செயல்பட்டு வருகிறது. பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியில் எம்எல்ஏவாக இருப்பவர் ஹர்மித் சிங் பதன்மஜ்ரா. இவர் கடந்த சட்டசபை தேர்தலில் சானோர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தான் ஹர்மித் சிங் மீது பாலியல் புகார் எழுந்தது. ஜிரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் அவர் மீது பாலியல் புகார் அளித்தார். ஹர்மித் சிங் தன்னை திருமணம் செய்தார். அவர் தனது மனைவியை விவாகரத்து செய்யும் முன்பாகவே விவாகரத்து ஆனதாக கூறி என்னுடன் பழகினார். அதன்பிறகு 2021ம் ஆண்டில் திருமணம் செய்தார். உடலுறவு வைத்து கொண்டார். அதன்பிறகு ஆபாசமாக திட்டுவது, ஆபாச போட்டோ, வீடியோக்கள் அனுப்பி மிரட்டினார்.
இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு ஹர்மித் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் இன்று காலையில் அவரை போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்த எம்எல்ஏ ஹர்மித் சிங், துப்பாக்கியை எடுத்து போலீஸ்காரரை சுட்டார்.
இதனால் வாகனத்தை நிறுத்திவிட்டு போலீஸ்காரர் அவரிடம் துப்பாக்கியை பிடுங்க முயன்றனர். அப்போது போலீஸ்காரரை தாக்கிய அவரை வாகனத்தைஎடுத்து கொண்டு எஸ்கேப் ஆனார். வாகனத்தை தடுக்க முயன்ற போலீஸ்காரர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய ஆம்ஆம்மி எம்எல்ஏ ஹர்மித் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications