பஞ்சாப் இடைத்தேர்தல் ரிசல்ட் - முதலமைச்சர் தொகுதியிலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றது. அந்த கட்சியின் சார்பில் முதல்வராக பகவத் மான் தேர்வு செய்யப்பட்டார். இவர் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சங்க்ரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Punjab by-election result - AAP suffered a shock defeat in the Chief Ministers constituency

பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து, எம்.பி பதவியை பகவத் மான் ராஜினாமா செய்தார். காலியாக இருந்த சங்க்ரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குர்மெயில் சிங் தோல்வியை சந்தித்தார்.

சிரோமணி அகாலிதளம் (அம்ரிஸ்தர்) கட்சியைச் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் மான் 5,822 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தல்வீர் சிங் கோல்டி மூன்றாவது இடத்தையும், பாஜக வேட்பாளர் கேவால் சிங் தில்லான் நான்காவது இடத்தையும் பெற்றனர்.

ஆரம்பம் முதலே சிரோமணி வேட்பாளருக்கும் ஆம் ஆத்மி வேட்பாளருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் சிரோமணி வேட்பாளர் 5000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

பஞ்சாப்பில் மாற்றம் என்ற முழக்கத்துடன் மூன்று மாதங்களுக்கு முன்னர் வரலாறு காணாத வெற்றி பெற்ற ஆம் ஆத்மி அதன் பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, தற்போது முதல்வராக உள்ள பகவத் மான் எம்.பியாக இருந்து ராஜினாமா செய்த தொகுதியில் தோல்வி அடைந்தது அக்கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+