மாணவர்களே தேதி சொல்லியாச்சு.. படிப்பில் கவனம்.. 10,+1,+2 ரிசல்ட் எப்போ? - அன்பில் மகேஷ் அப்டேட்
சென்னை: 10, 11,12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணைகளை இன்று வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் தொடங்கும் பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. மே மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
கடந்த 2020 முதல் 2022 வரைக்கும் கொரோனா காலமாகிப் போனது. இந்த கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். ஆல்பாஸ் ஆனாலும் தேர்வு எழுதாமல் பாஸ் ஆனதால் அவர்களால் மார்க் எத்தனை என்று சொல்ல முடியாமல் போனது.

கொரோனா ஒருவழியாக ஒழிந்து போன பின்னர்தான் 2022- 23 ஆம் கல்வி ஆண்டு எந்த தடைகளும் இல்லாமல் ஜூன் மாதம் தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுகள் வழக்கம்போல் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்றன. கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர்.
11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கி, ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்கி, 20ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். அச்சம் காரணமாக தேர்வு எழுதாமல் தவிர்த்த மாணவர்களுக்கு உடனடியாக தேர்வுகள் நடைபெற்று ரிசல்ட் வெளியானது.
இந்த ஆண்டு வழக்கம் போல 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு வரத் தொடங்கினர். காலாண்டு தேர்வுகளும் பொதுத்தேர்வுகள் போலவே நடைபெற்றது. அரையாண்டு தேர்வுகள் வழக்கம் போல டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நடப்பாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கேற்பு பொதுத் தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். அதன்படி இன்று பொதுத் தேர்வு தேதிகளை வெளியிட்டார்.
பிப்ரவரி 23 முதல் 29ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 10 நாட்கள் முன்னதாக தேர்வு நடைபெற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
மாணவர்களே தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. படிப்பில் முழு கவனம் செலுத்தி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கூறினார். டிசம்பர் மாதத்திலேயே பாடங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும். ஜனவரி மாதம் முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications