தொடர் விடுமுறை.. தாறுமாறாக கட்டணத்தை ஏற்றிய தனியார் ஆம்னி பஸ்கள்.. பாய்ந்தது ஆக்ஷன்
சென்னை: தொடர் விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் அதிக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வந்த நிலையில், விதிகளை மீறியதாக 102 ஆம்னி பஸ்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கினர். இதனால், நேற்றில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. எனினும், இந்த பேருந்துகளிலும் புக்கிங் முடிந்து விட்டது. இதனால், பயணிகள் பலரும் ஆம்னி பேருந்துகளை நாடி செல்கின்றனர். ஆம்னி பேருந்துகளிலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல மடங்கு கட்டணத்தை ஏற்றியுள்ளதாக பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
102 பஸ்கள் பறிமுதல்: இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறைக்கும் அதிக அளவில் புகார்கள் வந்தன. இதையடுத்து, அதிரடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது பல பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 102 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சுமார் 1,545 ஆம்னி பஸ்கள் விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.27.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தொடந்து இதுபோன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்கும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரம், வசதியை பொறுத்து: இதற்கிடையே ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆம்னி பஸ்களில் ஏசி, நான் ஏசி, ஸ்லீப்பர் உள்பட 6 வகையான சொகுசு பஸ்கள் உள்ளன. ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஏற்றவாறு பஸ்களின் தரம், வசதி ஆகியவற்றை பொறுத்து பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் விருப்பப் படி பேருந்துகளை முன்பதிவு செய்கின்றனர். பஸ்களில் வசூலிக்கும் கட்டணம் ஒரு ஆண்டுக்கு சராசரியாக அந்த பஸ்களை பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் போதுமானதாக இல்லை.
புகார் எண்: ஆம்னி பஸ்களுக்கு என்று மத்திய மற்றும் மாநில அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயம் கிடையாது. இருந்தாலும் பயணிகளின் நலன் கருதியும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணமும் சங்கங்களே அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்து உள்ளோம். ஆம்னி பஸ்களின் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற வெப்சைட்டில் இடம் பெற்று உள்ளது. ஆம்னி பஸ்கள் கட்டணம் சம்பந்தமான புகார்களை 90433 79664 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம்" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications