12 "ஹவர்ஸ் டியூட்டி" ஆபத்தாச்சே.. பாஜகவே தயங்குதே, திமுகவுக்கு என்னாச்சு? சீறியது யார்ன்னு தெரியுதா
சென்னை: பாஜகவே நடைமுறைப்படுத்த தயங்கும் 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றியது ஏன்? என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.. அத்துடன், 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரம் ஆக்கும் தொழிலாளர் விரோத சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.
நேற்றையதினம், கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
12 மணி நேர வேலை மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக ஆகிய கட்சிகள் பேரவையிலேயே எதிர்ப்புகளை பதிவு செய்தன..

திமுக அரசு: தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023-ஐ - குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. நாடு முழுவதும் தொழிலாளர்களும், தொமுச, ஏஐடியூசி, சிஐடியூ எச்எம்எஸ், உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை நிராகரித்து, பாஜக அரசு கடந்த 2020ம் ஆண்டில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியாகவே இந்த திருத்த சட்டம் அமைந்துள்ளதுதாக இக்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், தமிழக ஆம் ஆத்மி கட்சியும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரம் ஆக்கும் தொழிலாளர் விரோத சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்..
தொழிலாளர் உரிமை: அந்த அறிக்கையில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருக்கிறது. இது திமுக இத்தனை ஆண்டுக் காலமாகக் கடைபிடித்து வரும் தொழிலாளர் நலன்சார்ந்த கொள்கைளுக்கே எதிராக உள்ளது. மேலும் மே தின என்பதே தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டு மணி நேரம் வேலை என்பதேயாகும். தொழிலாளர்களின் ரத்தத்தில் அவர்களின் போராட்டத்தால் விளைந்த அடையாளம் தான் 8 மணிநேர வேலை. 8 மணிநேர வேலை உரிமையைப் பறிக்கும் வகையில், 12 மணி நேரமாக உயர்த்துவது உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும்.
இது சர்வாதிகார முதலாளித்துவ வர்க்கத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் இச்சட்டத்தால் தொழிலாளர் சமூகம் கூடுதலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, இதனை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள இந்த சட்டம், 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் பிரிவு 51, 52, 54, 55, 56 மற்றும் 59 ஆகியவற்றின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்கிறது. இதன்மூலம் வேலை நேரத்தைத் தொழிலகங்கள் விரும்புகிறபடி மாற்றி அமைத்துக்கொள்ள இது அதிகாரமளிக்கிறது. இதனால் தற்போதுள்ள 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக உயரும் ஆபத்து உள்ளதாக தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
வசீகரன் கோரிக்கை: தமிழ்நாட்டில் தான் 1923-ல் சிங்காரவேலரின் முயற்சியால் மே நாள் கொண்டாடப்பட்டது. அதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. பாஜகவே நடைமுறைப்படுத்தத் தயங்கிவரும் இந்த சட்டத்தை எதற்காக திமுக அரசு நிறைவேற்றியது ஏன்? தமிழக தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கிற தொழிலாளர் விரோத சட்டமான இந்த திருத்தச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று வசீகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications