தாம்பரம் அருகே ஏடிஎம்மில் பணமழை.. அது என்ன ரகசிய நம்பர் லாக்.. நூதன கொள்ளை நடந்தது எப்படி?
சென்னை: தாம்பரம் அடுத்த படப்பையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில், பணம் எடுக்க முடியாத படி நம்பர் லாக் செய்து, ரகசியமான நம்பர் லாக் முறையில் 13 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த கொள்ளையடித்தவர்களை தாம்பரம் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பஜாரில், மெயின் ரோட்டில் அமைந்துள்ள கேரளாவின் திருச்சூரை தலைமையிடமாக கொண்ட தனியார் வங்கியும் அதன் ஏடிஎம்மும் அருகருகே இருக்கிறது. இந்த தனியார் வங்கி ஏடிஎம்மிற்கு ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பணம் நிரப்புவது வழக்கம்.. இந்நிலையில் இரண்டு நாளிலேயே பொதுமக்களால் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து வங்கி ஊழியர்கள் என்னாச்சு என்று உள்ளே போய் பார்த்தனர். அங்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாத படி ரகசிய லாக் போடப்பட்டிருந்ததை கண்டனர். மேலும் வங்கி ஏடிஎம்மில் ரகசிய நம்பர் லாக் பயன்படுத்தி 13 லட்சம் வரை கொள்ளையடித்தது தெரியவந்தது..
இதையடுத்து உடனடியாக வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர்.மேலும் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த 4 மர்ம நபர்கள், வங்கியின் ரகசிய கோடு எண், மற்றும் ஏடிஎம்மின் ரகசிய பின் எண் ஆகியவைகளை பயன்படுத்தி, அடுத்தடுத்து இரண்டு நாட்கள், பட்டப் பகலில் ஏ. டி. எம்மில் சுமார் 13 லட்சம் பணத்தை கொளையடித்தது தெரியவந்தது.
வங்கி ஊழியர்களிடம் விசாரித்த போது, வங்கி ஏடிஎம் க்கு, பணம் நிரப்பும் ஊழியர்கள், கடந்த 6 ஆம் தேதி மாலையில், வங்கி ஏடிஎம்மில் 100, 200, 500 கட்டுக்கள் என மொத்தமாக 23 லட்சத்து 35 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை நிரப்பி உள்ளனர். இதைப்போல் பணம் நிரப்பிய பின்பு, வழக்கமாக நான்கு, ஐந்து நாட்களுக்குப் பின்பு தான் மீண்டும் வந்து பணம் நிரப்புவார்களாம்.
அதைப்போல் ஏடிஎம்மில் பணம் நிரப்பிய பின்பும், அடுத்த இரண்டு நாட்களில், வாடிக்கையாளர்கள் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியவில்லை என்றார்கள். மேலும் அனைவருக்கும் ஏடிஎம்மில் பணம் இல்லை என்ற தகவல் வந்திருக்கிறது. இதை அடுத்து வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்துள்ளார்கள். இதனால் வங்கி அதிகாரிகள் ஏடிஎம்மை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதபடி, ஏடிஎம் நம்பர் லாக் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் தாம்பரம் காவல் ஆணைய தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். பட்டபகலில் ரகசியமான நம்பர் லாக் முறையில் 13 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications