Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர்னு ப்ளூ கலரில் மாறிய உடம்பு.. ஒரே ரத்தம்.. மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி.. ஷாக்

மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் குடித்த 13 வயது சிறுமி உயிரிழந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மளிகை கடையில் கூல்டிரிங்க்ஸ் வாங்கி குடித்த 13 வயது பெண் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்... இவரது மகள் தரணி.. 13 வயதாகிறது.. இவர் தன் வீட்டு பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று, டோகிடோ கோலா என்ற கூல்டிரிங்ஸை 10 ரூபாய் தந்து வாங்கி குடித்துள்ளார்...

அத்துடன் ரஸ்னா பாக்கெட்டையும் வாங்கி குடித்துள்ளார். அது குடித்த சில நிமிடங்களிலேயே தரணி வாந்தி எடுக்க ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது..

 மயக்கம்

மயக்கம்

மேலும் மூக்கில் இருந்தும் ரத்தம் வந்துள்ளது.. இதனால் கொஞ்ச நேரத்திலேயே மயக்கமாகி விட்டார்.. அவரது உடம்பு நீல கலரில் மாறி போயுள்ளது.. இதை பார்த்து பயந்து போன குடும்பத்தினர், தரணியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்... ஆனால், தரணி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்..

டெஸ்ட்

டெஸ்ட்

இதையடுத்து, தகவலறிந்த சாஸ்திரி நகர் போலீசார் விரைந்து வந்து, தரணியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்காக ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... பிறகு தரணி குடித்த கூல்டிரிங்க்ஸில் இருந்து கொஞ்சமாக எடுத்து, அதை டெஸ்ட்டுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 மளிகை கடை

மளிகை கடை

மளிகை மற்றும் சிறு சிறு கடைகளில் பெயர் மற்றும் தேதி ஆகியவை இல்லாமல் உணவு பொருட்களை விற்க கூடாது என்று விதி உள்ளது.. ஆனாலும் இதை சிலர் கடைப்பிடிப்பதில்லை.. இதனால், பலர் பரிதாபமாக உயிரிழக்கும் சூழலும் உருவாகி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. சம்பந்தப்பட்ட கடையில், உறவினர்கள் இதை பற்றி கேட்டதற்கு அலட்சியமாக அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த மளிகை கடையில் காலாவதியான பொருட்களையும், தரமற்ற பொருட்களையும் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையிலுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மூச்சுதிணறல்

மூச்சுதிணறல்

மேலும், சிறுமி குடித்த குளிர்பானத்தின் 17 பாட்டில்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவற்றின் விற்பனையை தடுத்து அவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.. இதனிடையே சிறுமியின் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டபோது,"மூச்சுக்குழலில் உணவுத்துகள்கள் இருந்ததாகவும், அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் டாக்டர்கள் தெரிவித்ததாக" சாஸ்திரிநகர் போலீசார் தெரிவித்தனர்...

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

மேலும் சிறுமியின் உடலில் கூல்டிரிங்க்ஸில் விஷம் ஏறி இருக்கிறதா? என்பதை கண்டறிய சிறுமியின் உடல் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதன் முடிவில் தான் சிறுமியின் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+