118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.. அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில், திரைமறைவில் அரங்கேறும் அதிகார போட்டிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை சுற்றி- பின்னப்பட்டுள்ள அரசியல் வலை, அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. அதை பற்றின ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் தான் நமக்கு கிடைத்துள்ளது.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க துடிக்கிறதாம் பாஜக.. அதாவது நடிகர் விஜய்யின் தவெகவை வலுக்கட்டாயமாக தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதன் மூலம், அதிமுகவின் தனிப்பெரும்பான்மை வெற்றியை சிதைக்க முடியும் என்பது தான் டெல்லியின் முதன்மையான திட்டமாக தெரிகிறது.

bjp AIADMK vijay tvk Tamil Nadu assembly Election 2026 TN Election Special 2026

ஆட்சியில் பங்கு பிளான்

இதன் பின்னணியில் தமிழகத்தில் முதல்முறையாக நேரடி ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்ற பாஜகவின் நீண்ட கால ஆசை ஒளிந்திருக்கிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சிக்கல்களை தீர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார். ஆனால், அதிமுக முகாமிலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது.

விஜய்யின் வருகையை எடப்பாடி பழனிசாமி துளியும் விரும்பவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தும், பாஜக தலைமை வேண்டுமென்றே தவெக-வை முன்னிறுத்தி தொகுதி பங்கீட்டை தாமதப்படுத்தி வருகிறதோ என்ற பலமான சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளதாம்..

அதிமுக 118 சீட்

அதிமுகவை அடிபணிய வைக்க பாஜக கையாளும் இந்தத் தந்திரம், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலையில், அதற்காக குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட அதிமுக துடிக்கிறது. ஆனால், தவெக உள்ளே வரும் பட்சத்தில் அதிமுகவைப் வெறும் 130 முதல் 140 தொகுதிகளுக்குள் முடக்கிவிடலாம் என்பது பாஜகவின் திட்டமாக இருக்கிறதாம்.

இந்த கணக்கின்படி, அதிமுக 90 அல்லது 100 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு பாஜகவின் தயவு கட்டாயம் தேவைப்படும் ஒரு சூழல் உருவாகும். அப்போது "ஆட்சியில் பங்கு" என்ற நிபந்தனையைப் போட்டு அதிமுகவை திணற வைக்க பாஜக தயாராகி வருகிறதாம்.. இது ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட ஒரு பேரியக்கத்தின் சுதந்திரத்தையே சிதைக்கும் செயலாகும்.

தவெக விஜய்

விஜய்யின் வாக்குகளை தங்கள் பக்கம் எளிதாக திருப்பிவிட முடியும் என்று நம்பும் பாஜக, அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தமிழக எதிர்கால அரசியலில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க துடிக்கிறது.

தனது சொந்தக் கட்சி தொடர்பான முடிவுகளை கூட எடுக்க முடியாமல், யாரோ ஒருவரின் கண்ணசைவிற்காக அதிமுக தலைமை காத்திருக்க வேண்டிய அவல நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்ச்சி அதிமுகவிற்கு உடனடி பாதிப்பையும், நீண்ட கால அடிப்படையில் தவெக-விற்கும் ஒரு சிக்கலான சூழலையுமே உருவாக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்..

பாஜகவின் மாஸ்டர் பிளான்?

பாஜகவின் நெருக்கடிகளுக்குப் பணியாமல் தனது தனித்துவத்தைக் காக்க அதிக தொகுதிகளில் போட்டியிடுவதில் அதிமுக பிடிவாதம் காட்டக்கூடும்...

இல்லாவிட்டால் தவெக வருகையை தவிர்க்க முடியாவிட்டால், ஆட்சியில் பங்கு என்ற நிபந்தனையை முறியடிக்க தனது கோட்டையான கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் முழு பலத்தையும் திரட்டி தனிப்பெரும்பான்மை பெற வியூகம் வகுக்கலாம்.. ஆனால் என்ன தான் நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!


- நமது சிறப்பு நிருபர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+