Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதானே தாய்மை.. ஐசியூ வார்டு குலுங்கியபோதும்.. 3 பச்சிளம் குழந்தைகளை அரவணைத்து நின்ற அசாம் நர்ஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்களை பொதுமக்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.. நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்ச்சியிலிருந்து தங்களால் மீள முடியவில்லை என்றும் பீதி விலகாமல் தெரிவித்து வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், மருத்துவமனை கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், ஐசியூ வார்டில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வெளியாகி பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியை உண்டுபண்ணி வருகிறது. என்ன நடந்தது?

உலக அளவில் ரஷ்யா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் நிலநடுக்கங்கள் நடந்து, மிரள வைத்து வருகின்றன. அதேபோல நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை சமீபகாலமாகவே கர்நாடகா, அசாம் போன்ற பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன.

Assam 2 Nurses Earthquake

மாறிவரும் காலநிலை

நாளுக்குநாள் மாறிவரும் காலநிலை , பூகோள நிலவரங்களை கணக்கில் கொண்டு, நம்முடைய புவியியல் ஆய்வாளர்களும், எந்த நிலநடுக்கங்களையும் அலட்சியப்படுத்தக்கூடாது, அதனை தொடர்ந்து பெரிய பெரிய பூகம்பங்கள் வரலாம், நிலநடுக்கங்களுக்கு அந்தந்த அரசும் மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், நேற்றைய தினம் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. கவுஹாத்தி நகரில் நேற்று மாலை திடீரென ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியிருந்தது இந்த நிலநடுக்கம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

திடீர் நிலநடுக்கம்

உடல்குரி நகரை மையமாக கொண்டு, 5 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது... இதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களிலும், அண்டை நாடான பூட்டானிலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது..

இந்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், வீட்டிலிருந்த பொருட்கள் குலுங்கியிருக்கின்றன.. இதைப்பாத்து அச்சமடைந்த கவுஹாத்தி மக்கள், வீடுகளை விட்டு அலறியடித்துகொண்டு வெளியே ஓடிவந்து, தெருக்களில் தஞ்சமடைந்தனர்... கவுகாத்தி நகரின் பல பகுதிகளில் மக்கள் பயத்தில் சாலைகளிலும், தெருக்களிலும் கூடினார்கள்..

ஏற்கனவே அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பலமுறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.. இப்படித்தான் கடந்த 2ம் தேதியும் சோனித்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம், 3.5 ரிக்டராக பதிவாகியிருந்தது.

தெறித்தோடிய மக்கள்

நேற்றைய தினம் உடல்குரியில் 5.8 ரிக்டர் அளவு என்பதால் அம்மக்கள் நடுங்கி போனார்கள்.. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிர்ச்சேதமோ, பாதிப்புகளோ ஏற்படவில்லை என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்திருந்தார். அத்துடன் அசாம் மாநில அரசு மக்கள் பீதியடையாமல் இருக்க வேண்டும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.

"அந்த நேரத்தில் மெதுவாக ஆரம்பித்த அதிர்வுகள் நேரம் செல்ல செல்ல அதிகமானது.. வீட்டு சுவர்களும்கூட அதிர்ந்தன.. வீடுகள் பயங்கரமாக குலுங்க துவங்கின.. இதனால் நாங்கள் என்னசெய்வதென்றே தெரியாமல், குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினோம்.. அதிர்வுகள் நின்றபோதும், அந்த அதிர்ச்சி, பதற்றத்திலிருந்து நாங்கள் வெளியேவரவில்லை என்று அம்மக்கள் சோஷியல் மீடியாக்களில் பேட்டிகளை தந்து வருகிறார்கள்.

ஐசியூ வார்டு நர்ஸ்

இப்படிப்பட்ட சூழலில், நேற்று மாலை 4.41 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளிவந்துள்ளது..

நாகோவான் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது,. அப்போது மருத்துவமனை கட்டிடம், சுவர்களும் சேர்ந்து அதிர்ந்தன.. அப்போது ஐசியூ வார்டில் பணியிலிருந்த 2 நர்ஸ்களும் என்ன நடக்கிறதென்று புரியாமல் விழித்துள்ளனர்.. எனினும் சுவர்கள் எல்லாம் அதிர்ந்ததால், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பச்சிளம் குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்துள்ளனர்..

இந்த காட்சிதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதை பார்த்த நெட்டிசன்கள்கள் உயிரை துச்சமாக மதித்து, குழந்தைகளின் உயிரை காப்பதே தங்களது கடமை என்பதை நிரூபித்த 2 நர்ஸ்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+