ஆரம்பமே அசத்தல்.. "உலகமே காரித்துப்புதே.. கூச்சமேயில்லாமல் எடப்பாடி சொன்ன பொய்".. மருது அழகுராஜ் நச்
எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு விலக வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்
சென்னை: பயந்து நடுங்கி, பதுங்கு குழி அமைத்துக் கொண்டு வீதிக்கு வருவதற்கே அச்சப்படுகிற அளவுக்கு பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்ட எடப்பாடி பழனிசாமி, தன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ஒன்றரை கோடி தொண்டர்கள் கட்டிக்காக்கும் அதிமுகவை விட்டு ஒதுங்கி விடுவதே நல்லது என்று ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான மருது அழகுராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமியை சீண்டி விமர்சித்து வருபவர்.. அவரது பேச்சுக்கள் ஒவ்வொன்றும் எடப்பாடி தரப்புக்கு டென்ஷனையும், கடுப்பையும் ஏற்படுத்தி வந்த நிலையில்தான், திடீரென அவர் பதவி விலகுவதாக தகவல்கள் வெளியாகின..
ஆனால், இவர் கழகத்தில் இருந்து இவர் விலகுவதை ஓபிஎஸ் சுத்தமாக விரும்பவேயில்லையாம்.. அதனால், கட்சியில் இருந்து விலகும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று நிறைய அட்வைஸ்களை செய்துள்ளார் ஓபிஎஸ்..

கசியும் கண்ணீர்
இதனை அடுத்து, விலகல் முடிவை திரும்பப்பெற்றுக்கொண்டு மறுபடியும் அதிமுக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்தார் மருது அழகுராஜ்... "நாளைக்கு காளையார்கோவிலுக்கு அவசியம் வாங்க.. மருதிருவரை வழிபட்டு மருதுவின் மறுபிரவேசம் தொடங்கட்டும் என்றார்.. கசியும் கண்ணீரோடு ஆமோதித்தேன். எடப்பாடி ஏற்படுத்திய பிளவு ஓ.பி.எஸ் என்னும் மகத்தான மனிதரின் உன்னதத்தை உணர வைத்தது. உயிருள்ள காலம் வரை கழகத்திற்கு உழைக்க வேண்டும் என்னும் உறுதியை குருதியில் தீர்க்கமாய் உறைய வைத்தது. குறிப்பாக என்னை விடாமல் துரத்தி விலகல் முடிவை திரும்பப் பெறவேண்டும் என உரிமை வேண்டுகோள்களால் என்னை உருக வைத்த நட்புக்கும் உறவுக்கும் நன்றி.. நாளை முதல் களத்தில்.." என்று மருது அழகுராஜ் பதிவிட்டிருந்தார்.

பச்சை பொய்
அதன்படி இன்றைய தினமே ஆட்டத்தை மீண்டும் துவங்கிவிட்டார் மருது அழகுராஜ்.. மறுபடியும் களத்துக்கு வந்ததுமே, எடப்பாடியை சீண்டி ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டார்.. அந்த அறிக்கை இதுதான்: "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்தே தெரிந்து கொண்டேன் என்று அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சொன்னது பச்சைப்பொய் என்பது, அவர் அமைத்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையின் மூலம் அம்பலத்துக்கு வந்துவிட்டது.

பொய் + மெய்
தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தின் ஒவ்வொரு வினாடி விபரங்களும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அன்றைய தலைமைச்செயலாளர் மூலம் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது என்னும் உண்மை அருணா ஜெகதீசன் விசாரணை கமிசன் அறிக்கையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.. இது இப்படியென்றால் முதலமைச்சர் ஸ்டாலினை கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அரை மணி நேரம் சந்தித்து பேசினார் என்று, எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களிடம் சொல்ல, "அப்படி நான் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தேன் என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டால் நானும் என்னைச் சார்ந்தவர்களும் அரசியலை விட்டே போய்விடுகிறோம்;

ஊமை எடப்பாடி
இதனை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்காவிட்டால் அவர் மட்டும் அரசியலில் இருந்து விலகினால் போதும்" என பதறாத பண்பாளர் ஓபிஎஸ் சவால்விட இன்றுவரை அதற்கு பதில் சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஊமையாகி போனது ஏன்? இதற்கெல்லாம் மேலாக சசிகலா காலடியில் தவழ்ந்து புரண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை பெற்றுவிட்டு, என்னை தேர்வுசெய்தது சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என்று, உலகமே காரித்துப்புகிற ஒரு பொய்யை கடுகளவும் கூச்சமில்லாமல் சொன்னதும் எடப்பாடி பழனிசாமி தான். ஆக, பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு பொழுதெல்லாம் அந்த பொய்யையே மொய் எழுதி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

மாயத்தேவர்
இந்த தேசத்திற்கு இன்னுயிர் தந்த பூலித்தேவன் தொடங்கி, மருதிருவர், பசும்பொன் தேவர் உள்ளிட்ட தியாகத் தலைவர்களுடைய குருபூஜைகளுக்கும் வரவில்லை; கழகத்திற்கு இரட்டை இலைச் சின்னத்தை தேர்ந்தெடுத்து தந்து, அதன்மூலம் அதிமுகவுக்கு முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்த புரட்சித்தலைவரது முதல் வேட்பாளரான திண்டுக்கல் மாயத்தேவரின் மரணத்திற்கும் வரவில்லை; இதுமட்டுமல்லாமல் தன் கட்சித் தொண்டர்களை சந்திப்பதற்கே கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை வைக்கும் அளவுக்கு பொதுமக்களிடமும், கழகத் தொண்டர்களிடமும் பலத்த எதிர்ப்பையும், வெறுப்பையும் எடப்பாடி பழனிசாமி சம்பாதித்துவிட்ட நிலையில், இனி தூத்துக்குடி பக்கமும் அவரால் முகம் காட்டுவதென்பது இயலாத காரியமே!

லிஸ்ட் அதிரடி
இப்படி பயந்து நடுங்கி, பதுங்கு குழி அமைத்துக் கொண்டு வீதிக்கு வருவதற்கே அச்சப்படுகிற அளவுக்கு பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்ட எடப்பாடி பழனிசாமி, தன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ஒன்றரை கோடி தொண்டர்கள் கட்டிக்காக்கும் அதிமுகவை விட்டு ஒதுங்கி விடுவதே நல்லது" என்று குறிப்பிட்டுள்ளார். பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி செல்லாத நிலையில், ஓபிஎஸ் பசும்பொன்னுக்கு செல்வதுடன், தன்னுடன் தேவர் குருபூஜையில் பங்கேற்க இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் பட்டியலையும் முறைப்படி வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், மருது அழகுராஜின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications