Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20% அரசு ஊழியர்களுக்கு போனஸ்.. "அன்னைக்கு என்ன சொன்னீங்க"? திரண்ட தொழிற்சங்கங்கள்.. கூடுதா நெருக்கடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், போனஸ் கேட்டு, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கை மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.4

கடந்த வாரம், தமிழக அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நாமக்கல்லில் ஒரு பேட்டி தந்திருந்தார். அப்போது, "போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார்... தீபாவளி போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் மனு தந்துள்ளார்கள்.. எனவே, விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்" என்று கூறியிருந்தார்.

20 % Bonus for Tamil nadu government employees and TN Transport Union demand Deepavali Bonus

போக்குவரத்து துறை: எனினும் அதற்கான அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில், தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கிட வேண்டும் என்று கோரி, போக்குவரத்து துறைக்கு, போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள்.

அந்த கடிதத்தில், "கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை, 10 சதவீதமாக குறைத்ததுபோல், இந்த ஆண்டு செய்யக்கூடாது, இந்த ஆண்டு முழுமையாக 20 சதவீத போனசை வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இப்போதே அழைக்க வேண்டும், ஒருநாள் முன்பாகவே முன் பணமாக 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

அழைப்பு விடுக்குமா: எனவே, அடுத்த சில நாட்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், இதுவரை எந்த அழைப்பும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை என தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழலில், போக்குவரத்து ஊழியர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் மனு அளித்திருக்கின்றன.. இதுகுறித்து, திமுகவின் தொமுச, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிஐடியு - ஏஐடியுசி உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அரசு போக்குவரத்து துறை செயலாளரிடம் மனு அளித்திருக்கிறார்கள். அந்த மனுவில் உள்ளதாவது:

போக்குவரத்து கழகம்: அரசு போக்குவரத்து கழகங்கள், சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கின்றன. போக்குவரத்து கழகங்களின் சிறந்த செயல்பாட்டிற்கு, தொழிலாளர்களின் மிக கடுமையான உழைப்பு மிக முக்கியமான காரணம்.. எனவே, போக்குவரத்து ஊழியர்களுக்கு நியாயமான முறையில், போனஸ் வழங்க வேண்டும். நீண்ட காலமாக, 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதும், மற்ற துறை ஊழியர்களை விட, போக்குவரத்து ஊழியர்கள் குறைவான ஊதியம் பெற்று வருகின்றனர்.

ஊதியத்தை அதிகப்படுத்தி கேட்கும் போதெல்லாம், 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக, அரசு சார்பில் காரணம் கூறப்பட்டது. இப்போது போனஸ் தொகையை குறைப்பது, எவ்விதத்திலும் நியாயமற்றது. எனவே, 2022- - 2023ம் ஆண்டிற்கான போனஸாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். போனஸ் கணக்கிடும்போது குறைந்தபட்ச கூலி சட்ட அடிப்படையிலானசம்பளத்தை கணக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிருப்திகள்: ஏற்கனவே அரசு ஊழியர்கள், தங்களது கோரிக்கைகள் இதுவரை எதுவுமே நிறைவேறவில்லை என்று, தமிழக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கேட்டு எதிர்பார்ப்பிலும் காத்திருக்கிறார்கள்.. இதுபோக, ஜாக்டோ ஜியோ உள்ளிட்டவர்களும் போராட்டத்தை கையில் எடுக்க போகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், போக்குவரத்து துறையும் கோரிக்கைகளை விடாமல் விடுத்து வருவதால், திமுக அரசுக்கு நெருக்கடி கூடிவருகிறது.

அநேகமாக போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, முடிந்தால், இந்த முறை 20 சதவீத
போனஸையே வழங்கிடவும் வாய்ப்பிருப்பதாக சொல்வதால், பெருத்த எதிர்பார்ப்பு கூடிவருகிறது.

தமிழக அரசுப்போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கியபோது, 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை உள்பட 10 சதவீத போனஸ் வழங்கியிருந்தது.
ஒதுக்கீடு: மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் மாத சம்பளம் ரூ.7000 - 21,000 வரை பெறும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு இந்த போனஸ் தொகை அறிவிக்கப்பட்டதுடன், இதற்காக, தமிழக அரசு மொத்தம் ரூ.216 கோடி ஒதுக்கீடும் செய்திருந்தது. அதனால்தான், இந்த வருடத்துக்கான எதிர்பார்ப்பு தற்போது அரசு ஊழியர்களிடம் அதிகரித்து வருவதாக கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+