Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சோ" போயஸ் கார்டனுக்கே போயிட்டார்.. வேட்பாளர் லிஸ்ட் வேற.. சசிகலாதான் காரணம்.. சுளீர் பழனிசாமி.. ஏன்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து கேசி பழனிசாமி ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2012-க்கு பிறகு ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்று ஆணையம் சொல்வது உண்மைதான் என்று கேசி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்..

2012-ம் ஆண்டுக்கு பிறகு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்று கிருஷ்ணப்பிரியா வாக்குமூலம் தந்ததாக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, உண்மையிலேயே ஜெ.சசி இடையே சுமூகமாக உறவு இல்லையா? எதனால் இல்லை? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.. இந்நிலையில், நம் ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார் மூத்த தலைவர் கேசி பழனிசாமி.. அப்போது அவரிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.. இதற்கு அவர் அளித்த பதில்தான் இவை

 4 புள்ளிகள்

4 புள்ளிகள்

சிகிச்சை அளிக்கப்பட்டதில் உள்ள தவறுகள் என்ன என்பதை கண்டுபிடிப்பதுதான் ஆணையத்தின் வேலை.. அப்படியானால் இந்த சிகிச்சையில் யார் யாரெல்லாம் வருவார்கள் என்றால், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், டாக்டர் சிவகுமார், விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், சசிகலா போன்றோரை விசாரிக்க வேண்டும்.. சசிகலா எதற்காக சம்பந்தப்பட்டுள்ளார் என்றால், அம்மா சார்பில் ஒருவர் அங்குள்ள ஃபார்ம்களுக்கு கையெழுத்து போட வேண்டி வரும்.. அதற்காக சசிகலாஉள்ளே இழுத்துள்ளனர்.. அதாவது முழுக்க முழுக்க மருத்துவம் சம்பந்தமான விசாரணை இது..

 கையாலாகத்தனம்

கையாலாகத்தனம்

சிகிச்சையின்போது, அரசாங்கத்தில் தவறு நிகழ்ந்தால், அப்போது ஓபிஎஸ் இந்த லிஸ்ட்டில் சேர்க்கப்படுவார்.. சசிகலாவுக்கு இதில் முழுமையாக தொடர்பில்லை என்று சொல்வது சரியாகாது.. வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ், இன்னும் சில முன்னாள் அமைச்சர்களையும் சேர்த்திருக்க வேண்டும்.. சிகிச்சை விஷயத்தில் அப்போதைய முதல்வர் ஓபிஎஸ்ஸின் கையாலாகத்தனம் இது.. ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டால் அதற்கு தகுதியானவராக இருந்து கொள்ள வேண்டும்.. தகுதி இல்லையென்றால், அந்த பொறுப்பில் இருக்கக்கூடாது..

 தோழி உறவு

தோழி உறவு

இந்த பொறுப்புக்காக இன்றுவரை எடப்பாடி பழனிசாமியுடன் சண்டையும் போட்டுக் கொண்டிருக்கிறார்.. சசிகலா என்பவர் அம்மாவுக்கு தோழியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் தமிழ்நாட்டை ஆளும் நபர்இல்லையா? காவல்துறை உங்கள் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டதுதானே? சசிகலாவுக்கும் அம்மாவுக்கும் உறவு சரியாக இல்லை என்று ஆணையத்தில் கூறியுள்ளதும் உண்மைதான்.. உதாரணத்துக்கு, அதிமுகவில் தேர்தல் நிதி என்பது எப்போதுமே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசம்தான் ஒப்படைக்கப்படும்.. ஆனால், 2012-க்கு பிறகு, அதாவது சசிகலாவை வெளியேற்றிவிட்டு, மறுபடியும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்ட பிறகு, இந்த தேர்தல் நிதி முழுக்க எடப்பாடி பழனிசாமிவசம்தான் ஒப்படைக்கப்பட்டது.. சசிகலா வசம் ஒப்படைக்கப்படவில்லை..

 கருணாநிதி

கருணாநிதி

2011-க்கும் முன்பு இருந்த நம்பிக்கை, அதற்கு பிறகு இல்லாமல் போய்விட்டது.. அதேபோல, 2011-ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.. அம்மாவின் ஒப்புதல் இல்லாமலேயே அந்த வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது.. அம்மாவையும் மீறி, சசிகலாவே முடிவெடுத்து, இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார்.. அந்த லிஸ்ட்டில் சசிகலாவுக்கு விசுவாசமானவர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.. அதேபோல, கருணாநிதிக்கு விசுவாசமாக ஒருகாலத்தில் இருந்தவர்கள்கூட அந்த லிஸ்ட்டில் இருந்தார்கள்.. ஆனால், அம்மாவுக்கு விசுவாசம் இல்லாதவர்கள் பெயர்கள் அதில் இடம்பெற்றிருந்தது இப்படியெல்லாம் குற்றச்சாட்டு இருந்தது..

 நைட் 11.00

நைட் 11.00

2011 காலகட்டத்தில், இந்த பட்டியல் வந்தபோது எனக்கு 11 மணிக்கு ஒரு போன் வந்தது.. அந்த வேட்பாளர் லிஸ்ட்டில் தகுதியானவர்கள் யார்? தகுதியில்லாதவர்கள் யார் என்பதை பார்த்து தனி லிஸ்ட் எடுங்கள்.. இது தொடர்பாக சோ அவர்களிடம் பேசுங்கள் என்று சொன்னார்கள். நானும் அந்த பட்டியலை நைட் 11 மணிக்கு மேல் தயார் செய்து அனுப்பிவைத்தேன்.. மறுநாள் காலை சென்னை சென்று சோ அவர்களை சந்தித்தேன்.. பல சந்தேகங்களையும், விவரங்களையும் அவர் என்னிடம் கேட்டார்.. நானும் சொன்னேன்.. என்னிடம் பெறப்பட்ட விவரங்களை எடுத்துக் கொண்டு, அம்மாவிடம் சென்றார்..

 ஹாலிடே ரிசார்ட்

ஹாலிடே ரிசார்ட்

அதற்கு பிறகு,நான் தந்த லிஸ்ட்டை வைத்து, வேறு சில விஷயங்களையும் வைத்து இன்னொரு லிஸ்ட் அம்மா தயார் செய்தார்.. இந்த புள்ளியில்தான் பூசல் வெடித்தது.. சசிகலாவுடனான வருத்தம் என்பது இந்த லிஸ்ட் வெளியான தேதியில்தான் துவங்கியது.. சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களை பார்த்தீர்கள் என்றால் எல்லாருமே புரோக்கர்கள்தான்.. எனக்கு இவ்வளவு தந்தால், சீட் வாங்கி தருவேன் என்பதுதான், தமிழகம் முழுக்க வசூலில் இருந்தார்கள்.. தேர்தல் முடிந்ததுமே இந்த குடும்பத்தினர் போயஸில் வெளியேற்றப்பட்டார்கள்.. மறுபடியும்தான் இணைத்து கொண்டார்..

 10 ரூம்கள்

10 ரூம்கள்

அப்படி திரும்ப உள்ளே சேர்க்கப்பட்ட பிறகு, எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் சசிகலா ஈடுபட மாட்டார்.. குடும்பத்தினருடன் வேறு யாருடனும் தொடர்பு வைத்து கொள்ள மாட்டார் என்பது போன்ற சில உறுதிமொழிகளை பெற்றுக்கொண்டுதான், அனுமதித்தார் அம்மா.. ஆனால், அப்பல்லோ மருத்துவமனையின் 10 அறைகளிலும் சசிகலா உறவினர்கள்தான் நிரம்பி வழிந்தனர்.. அதென்ன ஹாலிடே ரிசார்ட்டா? சோறு தண்ணி இல்லாமல் மருத்துவமனை வெளியே தொண்டர்கள் அழுதுகொண்டு நிற்கிறார்கள், ஆனால், இவர்கள் 10 ரூம்களில் கூடி கும்மியடிப்பது சரியா? அம்மாவை பாதுகாத்து கொண்டு வர வேண்டும் என்ற அக்கறை இல்லையே..

துக்ளக்

துக்ளக்

ஆணையம் சொன்னது சரிதான்.. துக்ளக் நாளிழில் வெளிவந்த சசிகலா - அம்மா இருவரின் உறவுகளை குறித்துதான் ஆணையம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.. வேற எதுவும் முரணாக சொல்லவில்லையே.. மருத்துவ அலட்சியத்தில் சசிகலாவுக்கு இதில் பெரிய பொறுப்பு இருக்கு.. புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தை தந்தார் அவரது அண்ணன் மகள் லீலாவதி.. அப்படி ஏதாவது இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாராவது அம்மாவுக்கு தியாகத்தை செய்தார்களா? ஆனால், சசிகலா குடும்பத்தால்தான், அதிமுகவே இயங்குகிறது, என்பது போல செயல்பட்டு கொண்டிருந்தனர்.. இனியாவது தன் தவறை சசிகலா உணர வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+