முழு நிர்வாணமாக.. காருக்குள் காதல் ஜோடி.. சேலத்தை அதிர வைத்த 2 சடலங்கள்.. 2019ன் ஷாக் கிரைம்!
நிர்வாணமாக காதல் ஜோடியின் சடலம் மீட்கப்பட்டது
சென்னை: காதல் தோல்வியால் தற்கொலை என்பது வழக்கமான ஒன்று என்றாலும், சேலத்தில், இளம் காதல் ஜோடி ஒன்று காருக்குள்ளேயே நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டது இந்த வருடத்தில் கடுமையான அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியதை மறக்க முடியாது.
கடந்த அக்டோபர் 10-ம் தேதியன்று நடந்த சம்பவம் இது: சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். 22 வயது.. பிளஸ்-2 வரை படித்தவர்.. இவருடைய அப்பா கோபி வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். அதனால் சுரேஷும் அப்பாவின் தொழிலையே கவனித்து வந்தார்.
இவர் ஜோதிகா என்ற 21 வயது பெண்ணை காதலித்தார்.. ஜோதிகா ஓமலூர் அருகே உள்ள இன்ஜினியரிங் காலேஜில் 3ம் வருடம் படித்து வந்தார். சுரேஷூம், ஜோதிகாவும் 2 வருடமாக காதலித்து வந்தது, வீட்டிற்கு தெரிந்துவிட்டது.

எதிர்ப்பு
ரெண்டு பேருமே ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், ஜோதிகாவின் வீட்டில் ரொம்பவும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் இருவரையும் கூப்பிட்டு பெரியவர்கள் கண்டித்து இருக்கிறார்கள். வீட்டில் எல்லோருமே சேர்ந்து திட்டி, எதிர்ப்பை காட்டவும் என்ன செய்வதென்றே தெரியாமல், சம்பவத்தன்று இந்த ஜோடி மாயமாகிவிட்டது. இதனால் பயந்துபோன இரு வீட்டு நபர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் தேட ஆரம்பித்தனர். போலீசிலும் புகார் செய்தனர்.

அரைநிர்வாண கோலம்
இதனிடையே ஜவுளிக்கடை பஸ் ஸ்டாப் அருகே சுரேஷின் கார் ஷெட் உள்ளது. அங்கேயும் போய் தேடும்போதுதான், 2 டூவீலர்கள் அந்த வாசல் முன்பு நின்றிருந்தது. அதனால் ஷட்டர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் தேடப்பட்டு வந்த காதல் ஜோடி அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தனர்.

விசாரணை
இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர் சடலங்களை கட்டிப்பிடித்து கொண்டு அழுதனர். தகவலறிந்து செவ்வாய்பேட்டை போலீசார், விரைந்து வந்து சடலங்களை மீட்டு விசாரணையை கையில் எடுத்தனர். அப்போதுதான், பெரியவர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்பதால் தற்கொலை முடிவுக்கு வந்திருந்தது தெரியவந்தது.. சாவதற்கு முன்பு இருவரும் ஜாலியாக இருந்திருக்கிறார்கள்.. இதற்கு பிறகு சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டுள்ளனர்.

சடலங்கள்
இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர் சடலங்களை கட்டிப்பிடித்து கொண்டு அழுததை அந்த பகுதி மக்களால் லேசில் மறக்க முடியாது. தகவலறிந்து செவ்வாய்பேட்டை போலீசார், விரைந்து வந்து சடலங்களை மீட்டு விசாரணையை கையில் எடுத்தனர். காதல் ஜோடி ஒன்று நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் சேலம் மாவட்டத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை மறந்துவிட முடியாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications