Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வரதட்சணை கேட்டு கணவர் டார்ச்சர்! பல பெண்களுடன் உறவு! 25 வயது கர்ப்பிணி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்ததாக எழுந்த மன உளைச்சலால் 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தின் போது 35 வயதை மறைத்து தனக்கு 29 வயதுதான் என அவருடைய குடும்பத்தினர் ஏமாற்றியும் திருமணம் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் கணவருக்கு மற்ற பெண்களுடனும் கள்ள உறவு இருந்ததும் தெரியவந்ததால் அந்த பெண் மேலும் மனமுடைந்ததாக உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

25 years old pregnant girl commits suicide in chennai

மதுரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (35). இவருக்கும் சித்தலப்பாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரிக்கும் (25) கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணமானது. மகேஸ்வரி பிஎட் படித்துள்ளார்.

ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை நன்றாக கடந்த நிலையில் ஒரு நாள் மகேஸ்வரி கணவரின் சான்றிதழ்களை பார்வையிட்டார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திருமணத்தின் போது தனக்கு 29 வயது என பாலசுப்பிரமணியன் கூறிய நிலையில் அந்த சான்றிதழில் இருந்த பிறந்த வருடத்தை வைத்து கணக்கிட்டால் அவருக்கு 35 வயதாகிறது.

கிட்டதட்ட இருவருக்கும் 10 ஆண்டுகள் வித்தியாசம். 29 வயதுதான் என பொய் கூறி திருமணம் செய்து கொண்டது மகேஸ்வரிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து அவ்வப்போது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. அவ்வப்போது மகேஸ்வரியை ஆபாசமாக பாலசுப்பிரமணியன் பேசியதாக தெரிகிறது.

கணவர்தான் இப்படி என்றால், அவருடைய குடும்பத்தினரும் மகேஸ்வரியை எதற்கெடுத்தாலும் குறை கூறி சண்டை செய்து வந்ததாக கூறப்படுகிறது. வரதட்சிணை ஒரு பக்கம் இருக்க , பாலசுப்பிரமணியத்திற்கு வேறு சில பெண்களுடனும் தவறான தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதை எதிர்த்து கணவரை, மகேஸ்வரி கேள்வி கேட்டதற்கு, அவரை கடுமையாக அடித்துள்ளதாக தெரிகிறது.

திருமணம் முடிந்த சில நாட்களில் மகேஸ்வரி கர்ப்பம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கூட அந்த பெண்ணை அழைத்து செல்லவில்லை என தெரிகிறது. வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் கருவையும் கலைத்ததாக உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் 3 மாத கர்ப்பிணியாக (மீண்டும் கரு தரித்தார்) இருந்த மகேஸ்வரி தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு வந்த பாலசுப்பிரமணியன், தனது மனைவியிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டதாக சொல்லப்படுகிறது.

திருமண வாழ்க்கை இப்படிஆகிவிட்டதே என கவலைப்பட்ட மகேஸ்வரி, கணவர் வந்து சென்ற சில மணி நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகேஸ்வரியின் உறவினர்கள் கூறுகையில், மகேஸ்வரியின் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டி பாலசுப்பிரமணியம் பேசி வந்தார். அது போல் அவருடைய குடும்பத்தினரும், எங்கள் மகளை ஒன்றும் இல்லாதவள் என பழித்துள்ளனர். இந்த டார்ச்சர் தாங்க முடியாததால் எங்கள் பெண், கணவரிடம், "நாம் புதிய வீடு கட்டிக் கொண்டு சென்றுவிடலாம்" என கேட்டுள்ளார்.

அதற்குப பாலசுப்பிரமணியம் , " போய் உங்கள் அம்மா வீட்டில் ரூ 10 லட்சம் வாங்கிக் கொண்டு வா. நான் உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன்" என கூறினார். அந்த பெண் மாசமான போது கூட அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி விடுவார். மேலும் "கல்யாணம் செய்தால் வரவு வரும் என நினைத்தால் செலவுதான் வருகிறது" என எங்கள் பெண்ணிடம் கூறினார். அந்த பெண்ணை மரக்கட்டிலில் இடித்து சரியான அடி அடித்தார். எனவே பாலசுப்பிமணியத்தின் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+