தமிழகத்தில் ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா.. வேகமாக குறையும் ஆக்டிவ் நோயாளிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 3756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரே சீராக 3600 என்கிற அளவில் கடந்த சில நாட்களாக உள்ளது. சென்னையிலும் கொரோனா பாதிப்பு 7வது நாளாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 74,167 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து 46,480 ஆக உள்ளது.

சென்னையில் குறைவு

சென்னையில் குறைவு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72500 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் 379 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. செங்கல்பட்டில் 273 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் இன்று 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் 160 பேர், தூத்துக்குடியில் 141 பேர், விழுப்புரத்தில் 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் 112

கன்னியாகுமரியில் 112

கன்னியாகுமரியில் 112, காஞ்சிபுரத்தில் 133 பேர், தேனியில் 75 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். விருதுநகரில் 70 பேர், ராமநாதபுரத்தில் 65பேர், திருவண்ணாமலையில் 55 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோவையில் 83 பேரும், கடலூரில் 70 பேரும், சேலத்தில் 64 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

34,962 பேருக்கு பரிசோதனை

34,962 பேருக்கு பரிசோதனை

தமிழகத்தில் இன்று 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 13,87,322 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 14,13,435 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 36,938 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+