அவங்களை வர சொல்லுங்க! உதயநிதிக்காக களமிறக்கப்படும் 3 டாப் புள்ளிகள்.. ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிஏவாக நியமிக்கப்பட உள்ள அதிகாரிகள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான முக்கிய லிஸ்ட் ஒன்று தயாராகி உள்ளதாக திமுக தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அவர் அமைச்சராக பதவி ஏற்கிறார்.

தமிழ்நாடு திமுக அரசு பதவி ஏற்று 19 மாதங்களுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இதில் விளையாட்டு துறை, இளைஞர் நலன் துறை, சிறப்பு செயல்திட்ட செயலாக்கம் துறை ஆகிய துறைகள் உதயநிதி ஸ்டாலினிக்கு வழங்கப்படும்

ஒரு கேள்வி

ஒரு கேள்வி

உதயநிதியின் உதவியாளர்களாக வருவதற்கு பலரும் முயற்சித்துள்ளனர். அதாவது துறை ரீதியான செயலாளர் இல்லாமல், அமைச்சருக்கு என்று உதவியாளர் இருப்பார். பெரும்பாலும் உதயநிதி பொறுப்பேற்க போகும் விளையாட்டு, இளைஞர் நலன் துறைக்கு ஐஏஎஸ் ககன் தீப் சிங் பேடி செயலாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் உதயநிதியின் தனிப்பட்ட உதவியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் தனது உதவியாளர்களை செலக்ட் செய்வதில் அவரே முழு கவனம் செலுத்துகிறார் என்று கூறப்படுகிறது. அரசு சார்பில், 3 பி.ஏ.க்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த இடத்தை பிடிக்க அரசு அதிகாரிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது.

யார் அது?

யார் அது?

அமைச்சராகும் உதயநிதிக்கும் மொத்தம் மூன்று பிஏக்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் சீனியர் பி.ஏ., ஜூனியர் பி.ஏ என்று கலவையான நியமனங்கள் செய்யப்பட உள்ளன. அதன்படி சீனியர் பிஏவாக முனிராஜ் நியமனம் செய்யப்பட உள்ளார். இவர் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வருகிறார். அதில் இ கவர்ன்ஸ் துறையில் சிஸ்டம் அனலிஸ்ட்டாக இருக்கிறார். தற்போது துணை ஆட்சியர் ரேங்க்கில் அவர் இருக்கிறார். இவர் பெரும்பாலும் இளைஞர் நலன், சிறப்பு திட்ட செயலாக்க துறைகளில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

ஜூனியர் பிஏ

ஜூனியர் பிஏ

இன்னொரு பக்கம் ஜூனியர் பிஏவாக சதாசிவம் நியமிக்கப்பட உள்ளார். இவர் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றி வருகிறார். இதில் சூப்பிரண்டாக இருக்கும் அவர், விளையாட்டு துறை அமைச்சர் ஆகும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆலோசகராக உள்ளார். விளையாட்டு துறையில் உதயநிதிக்கு இவர் ஆலோசனைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக மூன்றாவதாக அலுவலக உதவியாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட உள்ளார். பொதுத்துறையில் பணிப்புரியும் கணேசன் இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர்கள் மூவரும்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு உதவியாளராக இருப்பார்கள். இது போக சட்டப்பேரவை செயலக பணிகளை கவனித்து வரும் அப்பன்ராஜ், கார்த்திக் ஆகியோரும் உதயநிதி துறையில் இணைந்து அவருடன் பணி செய்ய உள்ளனர்.

யார் அந்த அதிகாரி

யார் அந்த அதிகாரி

இந்த அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க போகும் துறைக்கு, அதாவது விளையாட்டு துறைக்கு செயலாளரை தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருகிறதாம். இந்த துறைக்கு அனுபவம் வாய்ந்த செயலாளரை நியமனம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறாராம். இளம் அரசியல்வாதியுடன் செயல்பட கூடிய, அதே சமயம் நன்றாக ஆலோசனை செய்ய கூடிய நபரை முதல்வர் ஸ்டாலின் நியமிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். தற்போது சென்னை மாநகர ஆணையராக இருக்கும் ககன் தீப் சிங் பேடி.. சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதோடு மேயர் பிரியாவிற்கு சிறப்பாக வழிகாட்டி வருகிறார். மூத்த அதிகாரியாக இருந்தாலும் இளைஞர்களுடன் இணைந்து செயலாற்றும் குணம் கொண்டவர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகும் பட்சத்தில் அவரின் துறைக்கு ககன் தீப் சிங் பேடியை நியமனம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+