அரசு பஸ்ஸில் யார் பாருங்க.. சென்னையில் 300 எலக்ட்ரிக் ஏசி பஸ்.. பழைய கட்டணத்திலேயே செம சர்ப்ரைஸ்
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நகரின் பொதுப்போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், முக்கிய போக்குவரத்து மையங்களை ஒருங்கிணைக்கும் ஒரு மாபெரும் புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.. ஆம், இந்த புதிய திட்டத்தின்படி, சென்னையில் டிராபிக் வெகுவாக குறையும்.. அத்துடன் பொதுமக்களுக்கும் பயண நேரம் நிறையவே குறையும்.. அப்படியொரு திட்டத்தைதான் அரசு இப்போது கொண்டுவந்துள்ளது.. இதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நம்முடைய சென்னையை பொறுத்தவரை,மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3,500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. இந்த பஸ்களில் நாள்தோறும் சுமார் 34 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

சென்னை மின்சார பஸ்கள்
இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் பஸ்களை பயன்படுத்தினாலும், ரயில் அல்லது மெட்ரோவில் இறங்கிய பிறகு தங்கள் வீடுகளுக்கோ அல்லது ஆபீஸ்களுக்கோ செல்வதற்கான இறுதி கட்ட இணைப்பு சேவை என்பது நீண்டகால குறையாகவே இருந்து வருகிறது..
அதுவும் மெட்ரோ மற்றும் எலக்ட்ரிக் ரயில் நிலையங்களில் இருந்து அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கு செல்ல பயணிகள் கூடுதல் நேரத்தையும் பணத்தையும் செலவிட வேண்டிய நிலைமை உள்ளது.. இதுபோன்ற சிரமங்களுக்கு ஒரு முடிவு கட்டும்வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தற்போது சூப்பரான முக்கிய முடிவை எடுத்துள்ளது.
300 எலக்ட்ரிக் பஸ்
அதன்படி மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை குடியிருப்பு பகுதிகள், அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுடன் நேரடியாக இணைக்கும் வகையில் 300 புதிய எலக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்ய போக்குவரத்து கழகம் இப்போது ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்கள் எல்லாமே குளுகுளு ஏசி கொண்டவையாகும்.
இந்த திட்டத்தின் மிக முக்கியமான ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இது அரசு மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த எலக்ட்ரிக் பஸ்களை இயக்குவது, அவற்றை பராமரிப்பது, அவற்றுக்கு தேவையான மின்சார வசதி உட்பட மற்ற உள்கட்டமைப்பு பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களே முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
பழைய கட்டணத்திலேயே
இப்படியெல்லாம் செய்வதன் மூலம் நிர்வாக சுமை குறைவதோடு, பயணிகளுக்கான சேவையின் தரம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
அதுமட்டுமல்ல, இந்த ஒப்பந்தத்தில் ஒவ்வொரு எலக்ட்ரிக் பஸ்சும் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 4800 கிலோமீட்டர் தூரம் கட்டாயம் இயக்கப்பட வேண்டும் என்ற கண்டிஷனும் விதிக்கப்பட்டுள்ளதாம்.. இது எதற்காகவென்றால், இதன் மூலம் நகரின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இந்த இணைப்பு சேவை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்பதற்காகத்தான்.
ஏசி வசதி ஜாலி டிரிப்
அப்படியென்றால் கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுமா? என்ற டவுட் வரலாம்.. அந்த பயமே தேவையில்லை.. காரணம், இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் சேவைக்காக பயணிகளிடமிருந்து எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சாதாரண கட்டண முறையிலேயே இந்த நவீன பஸ் சேவைகளும் வழங்கப்பட உள்ளன..
அரசின் இந்த நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதன் மூலம் பொதுமக்களின் பயண நேரம் கணிசமாகக் குறைவதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார வாகனங்களின் பயன்பாடு சென்னையில் பெருமளவு ஊக்குவிக்கப்படும்..
மேலும் இந்த 300 எலக்ட்ரிக் பஸ்களின் வருகை சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, சாமானிய மக்களின் தினசரி பயணத்தை மிகவும் எளிதாகவும் இனிமையாகவும் மாற்றும் என்று நம்பப்படுகிறது..!!
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications