IAS Officers Transfer:தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! மீண்டும் வனத்துறைக்கே சென்ற சுப்ரியா சாஹு
சென்னை: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு ஐஏஎஸ் காலநிலை மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரண் குராலா ஐஏஎஸ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுறை ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராக ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங், தேனி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், உயர்கல்வித் துறை செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகளின் நலத் துறை செயலாளராக மதுமதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதலை தலைமைச் செயலாளராக சுப்ரியா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன், வணிக வரி மற்றும் பத்திரத் துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். TANGEDCO தலைவர் நந்தக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை திட்ட இயக்குநராக வினீத் நியமிக்கப்பட்டார். சிறுபான்மை நலத் துறையினர் சிறப்பு செயலாளராக கலையரசி, மனிதவளத் துறை மேலாண்மைத் துறை செயலாளராக பிரகாஷ், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக சுரேஷ்குமார், மேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையரக ஆணையராக ஆபிரஹாம், தமிழக மின்விசை உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநராக ஆல்பி ஜான் வர்கீஸ்,
தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக பிரபாகர், தமிழக திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக கிராந்தி குமார், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் செயலராக ஷஜீவனா, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை கூடுதல் ஆட்சியராக சங்கத் பல்வந்த் வாகே, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் ஆட்சியராக பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் ஆட்சியராக கேத்தரின் சரண்யா, ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் ஆட்சியராக அர்பித் ஜெயின்,
ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரகத்தின் ஆணையராக ஹர்சகாய் மீனா, நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளராக மங்கத் ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலராக மதுமதி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நந்தகுமார், கால்நடை, பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் அரசு செயலாளராக சுப்பையன், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசுகூடுதல் தலைமைச் செயலராக குமார் ஜயந்த்,
தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மை செயலர் - பிரஜேந்திர நவ்நீத் ஆகியோர் நியமம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுத் துறை அரசு சிறப்புச் செயலாளராக சஜ்ஜன் சிங் ரா. சவான்,
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலாளராக மணிவாசன், சிறப்பு முயற்சிகள் துறை அரசுகூடுதல் தலைமைச் செயலாளராக கோபால், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், முதன்மை செயலர் / தலைவராக வெங்கடேஷ், பொதுப்பணித்துறை அரசு செயலாளராக ஜெயகாந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!










Click it and Unblock the Notifications